பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

718 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



கொண்டிருந்த தோற்றமுமாக ஒரு காதல் கதாநாயகனுக்குரிய சகல லட்சணங்களுடன் ஆறுமுகம் பூங்காவின் தென் திசைக்கோடியில் - யமன் திசையில் பிரவேசித்தான் நமது கதாநாயகனாகிய திரு. ஆர். எஸ். ராஜா. மிஸ் மனோரஞ்சிதம் அங்கே அவனை எதிர்பார்த்துத் தயாராகக் காத்திருந்தாள். மஞ்சள் வாயில் புடவையும் நீலப்பட்டு ரவிக்கையும் ரோஸ் தாவணியுமாக மனோரஞ்சிதம் அன்று பிரமாதமாக டிரஸ் செய்து கொண்டு வந்திருந்தாள். அவளுடைய 'மில்லியன் டலார் ஸ்மை’லாகிய அந்தக் கவர்ச்சிக் குறுகை அவனை வரவேற்றது. அவளருகே ஒட்டினாற்போல் அமர்ந்துகொண்டு,

“ஓ! யூ ஆர் லுக்கிங் வெரி நைஸ் டுடே ஸோ ப்யூட்டி புல்” என்று வழக்கம் போலவே கம்பீரமாக ஆரம்பித்தான் திரு. ஆர். எஸ். ராஜா. அவள் அதை அவ்வளவு சுவாரஸ்யமாகவோ இலட்சியம்செய்தோ கேட்காவிட்டாலும் போலியாக நாணுவதுபோல நடித்தாள். கையில் கொண்டு வந்திருந்த சிறிய காகித உறையைப் பிரித்துத் தன்னுடைய புகைப்படத்தை அவள் புல் தரையில் மெளனமாகச் சிரித்துக்கொண்டு எதிரே எடுத்து வைத்தவுடன் - தனக்காகத்தான் அவள் அதை கொடுக்கிறாள் என்று எண்ணிக் கொண்ட அசட்டு ஆர்.எஸ்.ராஜா உடனே தன்னுடைய சட்டைப் பையிலிருந்து தனது புகைப்படத்தை எடுத்து அவள் படத்துக்குப் பதிலாக மாற்றிக் கொள்வதுபோல் புல் தரையில் எதிரே வைத்தான். அவன் தன் படத்தை எடுத்து எதிரே வைத்ததைப் பார்த்ததும் அவள் பொறுக்க முடியாமல் கொல்லென்று சிரித்துவிட்டாள்.

ஆ! அது ஒரு ஐம்பது மில்லியன் டாலர் பெறுகிற சிரிப்பாக இருந்தது.

“என்ன மிஸ்டர் ராஜாவிளையாடுகிறீர்களா நீங்கள்? வருகிற மாதம் நம் மாணவர் யூனியனிலிருந்து ஷயரோகநிவாரண நிதிக்காக வெளியிடப் போகிற சிறப்பு மலருக்குக் கட்டுரை கொடுப்பவர்களும், புகைப்படம் கொடுப்பவர்களும் உங்களிடமே தரவேண்டுமென்று முந்தாநாள் சர்க்குலர் வந்ததே? நீங்களே அதை மறந்து விட்டீர்களா? நாங்களெல்லாருமே உங்களிடம் படத்தைக் கொடுக்க வேண்டியிருக்க நீங்கள் உங்களது படத்தை என்னிடம் கொடுத்து என்ன ஆகப்போகிறது? இரண்டு படமும் உங்களிடமே இருக்கட்டும்” .

இதைக் கேட்டதும் ஆர்.எஸ்.ராஜாவின் முகத்தில் நிச்சயமாக அசடு வழிந்தது. அவன் தன்னுடைய நூற்றுக்கு நூறு சதவிகித ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

“மலரில் வெளியிட ‘பிளாக்’ எடுத்ததும் உங்களது இந்தப் படத்தை நானே வைத்துக்கொள்ளப்போகிறேன்மிஸ் மனோரஞ்சிதம்!” என்றான் திருஆர்எஸ்.ராஜா,

"ஓ! பேஷாக வைத்துக்கொள்ளுங்கள் மிஸ்டர் ராஜா! இதோ இப்பொழுதே படத்தின் பின்புறம் உங்களுக்கென்று எழுதிக் கையெழுத்துக்கூடப் போட்டுத் தந்துவிடுகிறேன்" என்று கூறியபடியே அந்தப்படத்தை எடுத்து,"அருமைச்சகோதரர் மாணவ நண்பர், திருஆர்.எஸ்.ராஜா அவர்களுக்கு என் நினைவாக என்று எழுதிச்