உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3G நிசப்த சங்கிதம்

கொள்ளச் சில விநாடிகள் ஆயின. முத்துராமலிங்கம்தான் முதலில் அவளைக் கேட்டான். - * .

இன்னும் பர்மிங்ஹாம் போகலியா டிரிப் என்ன ஆச்சு?' -

போகலே! டிரிப் ஒரு மாசம் தள்ளிப் போச்சு நீங்க எங்கே இப்பிடி...'

"நானா? நான் இந்த சினிமா கம்பெனியிலே வேலை பார்க்கறேன். இன்னிக்கு இங்க ஷஅட்டிங்...குரங்காட்டிக்கு குரங்கை எப்பிடி வேணாலும் ஆட்டி வைக்கிற உரிமை இருக்கிறாப்ல எங்க முதலாளி என்னையும் ஷல்ட்டிங்கிலே நாலு பேர் குளிச்சிட்டிருக்கிற மாதிரி வர்ரதுக்காகக் குளிக்கச் சொல்லி ஆட்டி வைக்கிறாரு...' -

"ஐயையோ ஷூட்டிங்கா...? அப்படீன்னா நான் சிக்கிரம் டிரஸ்ஸை மாத்திக்கிட்டு ஒடணும். இந்த ஸ்விம் மிங் டிரஸ்ஸிலே நான் படத்திலே விழுந்து வச்சேன்னா சமந்திரி மகள் நீச்சல் உடையில் படப்பிடிப்பில் தோன்றினார்’னு எந்தப் பேப்பர்க்காரனாவது போட்டுடப் போறாங்க.

'இது இல்லாட்டி உங்கப்பாவைப் பத்திப் பேப்பர்ல வர்ரத்துக்கு வேற ஒண்ணுமே இல்லியா என்ன? நாள் தவறாமதான் லஞ்சம், ஊழல், சந்தர்ப்பவாதம்னு பேப்பர்லே உங்கப்பா பேரு நாறிக்கிட்டிருக்கே? போறாத கொறைக்கு அந்த மனுசன் சிவகாமிநாதன் கூட்டம் போட்டு இதையெல்லாம் சொன்னாருங்கறத்துக்காக... அவரோட கூட்டத்தைக் கலைச்சு அரெஸ்ட் பண்ணி அவர் மேலே பொய் வழக்கு வேறப் போட வச்சிருக்காரு.

நீங்க அந்த வடபழநிக் கூட்டத்துக்கு வந்திருந்தீங் களா? நான்கூட அன்னிக்கு அம்மாவோடக் கோயிலுக்கு வந்திருந்தேன். திரும்பறப்ப அவரு பேச்சைக் கேட்டேன். பிரமாதமாப் பேசறாரு எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சிப் போச்சு.' " . . . . . - -