நா. பார்த்தசாரதி I 39
முத்துராமலிங்கத்துக்கு இடமும் மனிதர்களும் நன்றாகப்" பிடிபட்டு விட்டார்கள். ஸ்டூடியோவிலும் அவுட்டோரிலும் வேலைக்காகச் செலவழிந்த நேரங்களைத் தவிர மாலை வேளைகளிலும், இரவிலும், தியாகி சிவகாமிநாதனின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் தேடிச் சென்று விருப்பத் தோடு கேட்டுவிட்டு வந்தான் அவன். - சிந்தாதிரிப்பேட்டைக்குத் தேடிச்சென்று தானே தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு அவருடைய
தியாகியின் குரலுக் குச் சந்தாவும் கட்டினான்.
உங்களைப் போலத் துடிப்பும் துணிவுமுள்ள இளைஞர்களைப் பார்க்கறப்பத்தான் கொஞ்சம் ஆறுதலா யிருக்குத் தம்பி எதிர் நீச்சல் போட்டே எண் வாழ்க்கையைக் கழிச்சாச்சு. ஆனா இன்னும் எதிர் நீச்சல் ேபாட ற தி .ே ல நான் சலிப்படைஞ்சிடாமத்தான் இருக்கேன்' என்றார் சிவகாமிநாதன். - -
பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவன் தற்செயலாத நேருக்கு நேர் மிஸ். மங்காவைச் சந்திக்க நேர்ந்தது. நகரின் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் அவன் சார்ந்திருந்த கம்பெனியின் படத்திற்காக ஷ்ட்ைடிங் ஏற்பாடாகியிருந்தது. வழக்க மாக வாடிக்கையாளர்கள் குளித்துக் கொண்டிருந்தபோதே கதாநாயகனும், கதாநாயகியும் அங்கே சந்திப்பது போலப் படப்பிடிப்பு நடைபெற்றாக வேண்டும். -
அன்று ஹோட் ட லில் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கை நீச்சல் குளத்தைப் பொறுத்தவரை மிக மிகக் குறைவாயிருந்தது. அந்த நீச்சல் குளத்தில் வெளியார் களும் கட்டணம் கட்டிவிட்டுக் குளிக்கலாம். படப்பிடிப்பு நடக்கப் போகிறது என்பது தெரியாமல் தற்செயலாக, மங்காவும் அங்கே நீச்சல் குளத்துக்கு வந்திருந்தாள். ஒருவரை மற்றொருவர் அங்கே அந்த உடையில் எதிர் பாராததால் இருவருக்குமே ஆச்சரியம்தான். சமாளித்துக்