நா. பார்த்தசாரதி 145
அந்நிய நாட்டுக் கல்வி, அந்நிய நாட்டு உத்தி யோகம்னு நாயா அலையிற குடும்பங்கள் சுதந்திரத்துக் கப்பறமும் பெருகிப் போச்சு-"
நீங்க அதைப்பத்தி என்ன நெனைக்கறிங்க முத்து ցուի?" >
வசதி உள்ள குடும்பங்களுக்கும், மத்திய தர வர்க்கத் தினருக்கும் வருகிற புதிய நோய்களில் இதுவும் ஒன்று. உள் நாட்டில் படித்தவர்கள் கேவலம் என்று நினைப்பதும் வெளி நாட்டில் படித்தவர்களும், படிப்பவர்களும் உயர்வு என்று நினைப்பதும் ராவ்பகதூர் திவான்பகதூர் மனப்பான்மை ஜஸ்டிஸ் கட்சியின் மிச்சம் மீதாரிகள் இந் நாட்டில் பரப்பும் நோய்'
1உங்களுக்குப் பிடிக்கலைன்னா நான் போகப் போற தில்லே'... - - -
நான் என் அபிப்பிராயத்தைத்தான் சொன்னேன். நீ போகக் கூடாதுன்னு சொல்ல நான் யார்...?
என்னைப் பிடிக்கலைன்னாப் பிடிக்கலைன்னு நேருக்கு நேராவே சொல்லிடலாம். அதுக்காக இப்படி நான் யாரோ நீ யாரோங்கிற மாதிரிப் பேச வேண்டியதில்லை."
முத்துராமலிங்கம் வியப்புடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். முதல் நாளிரவு தான் ஆற்றிய சொற்பொழி வில் அவள் அறவே மயங்கிப் போய்க் கட்டுண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. ஆனால் புரிந்ததை அப்படியே அப்போதே நம்பிவிடாமல் மேலும் மேலும் சோதித்து உறுதி செய்துகொள்ள விரும்பினான் அவன். அவளோடு உரை யாடலைத் தொடர்ந்தான். . . . . . . . . - • ...,
ஒழுக்கம், நாணயம், உழைப்பு, சமூகநலனுக்குப் பாடுபடுவது இவையெல்லாம் மிகமிக அவசியம் என்று நினைக்கிற ஒரு தரப்பையும் தலைமையையும் சார்ந்து