உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 芷苓7

போறதாச் சொல்லிக் காரையும் டிரைவதையும் வீட்டுக்குத் திருப்பியனுப்பிவிட்டு நீ பாட்டுக்குக் கண்டவனோட கிளம்பிக் கண்டவன் வீட்டுக்கெல்லாம் போறது நம்ம ஸ்டேட்டஸுக்குச் சரியா இருக்காது." -

டிரைவர் வீட்டுக்குப் போய் அப்பாவிடம் எல்லாம் சொல்லியிருக்கவேண்டும் என்று தோன்றியது. அவள் அதற் காக அஞ்சவோ பதறவோ இல்லை. -

நான் பச்சைக் குழந்தையோ வாயில் விரலை வைத்தால் கடிக்கத்தெரியாத யாப்பவோ இல்லை அப்பா! எங்கே போகலாம் யாரைப் பார்க்கலாம் எங்கே போகக் கூடாது. யாரைப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் எனக்குத் தெரியும்பா'

'முடிவா நீ என்னதான் சொல்றேம்மா?" 'அநாவசியமா நீங்க சிவகாமிநாதனுக்குத் தொந்தரவு குடுத்தா நானே கோர்ட்டில் படியேறி வந்து அந்தத் தங்க வளையல்களை அவருக்கு மனம் விரும்பிக் கொடுத்தது நான் தான்னு சொல்லத் தயங்கமாட்டேன்ப்பா!'

அதை மட்டும் தான் சொல்லிவியா? அப்புறமும் ஏதாவது சொல்லிவியா?" , - > "அவசியமானா அதுக்கு மேலேயும் சொல்லத் தயங்க

மாட்ட்ேன். - ' . - 'உண்ட விட்டுக்கும் ப்ெத்த தகப்பனுக்கும் துணிஞ்சு

துரோகம் செய்யப்போறியா?" ‘. . . . . .

"நீங்க செய்துக்கிட்டிருக்கிற சமூகத் துரோகங்களை விட இது ஒண்ணும் அத்தனை பெரிசு இல்லே..."

"உன்னை யாரோ நல்லா பிரெய்ன் வாஷ் பண்ணி யிருக்காங்க. . . . . ... . .

"ஆமா என் ப்ரெய்ன்ல இருந்த அழுக்கை எல்லாம் வாஷ் பண்ணிச் சுத்தமா.இப்போ ஆக்கியிருக்காங்க."