பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...நா. பார்த்தசாரதி 165

சிறிது நேரத்தில் தட்டுவது நின்று போய்விட்டது. அம்மாவும், டிரைவரும் பொறுமை இழந்து வீட்டுக்குத் திரும்பிப் போயிருக்கவேண்டும் என்று மங்கா அனுமானித் துக்கொண்டாள்.

பளிரென்று வெளிச்சம் பரவியது. யாரோ சுவிட்சைப் போட்டிருந்தார்கள். யார் என்று திரும்பிப் பார்த்தால் சிவகாமிநாதனே நின்றுகொண்டிருந்தார்.

நீங்களா? யாரோன்னு பயந்து போனேன். எங்கம்மா தேடி வந்து கூப்பிட்டாங்க...நான் பிடிவாதமா வரலேன் னுட்டேன்.”

"தெரியும் அம்மா! நான் எல்லாத்தையும் என் ரூம் ஜன்னல் வழியாகக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். உனக் கும் இத்தனை பிடிவாதம் கூடாது! உன்னைக் கண்டிச்சு நாலு வார்த்தை கடுமையாப் பேசி வீட்டுக்குப் போன்னு . என்னாலேயும் சொல்ல முடியலே. நானே வேண்டா வெறுப்போட உன்னைத் தட்டிக்கழிக்கிறேன்னு நீ என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாதேன்னும் பயமா இருக்கு."- - . . . - "தயவுசெய்து என்னையும் உங்களோட இன்ன்ொரு பெண்ணா நினைச்சு நடத்துங்க...அந்நியமாப் பாவிக்கா தீங்க...'

"நான் ஒரு காலத்திலியும் உன்னை அந்நியமர் நினைக்க மாட்டேன் அம்மா! ஆனா உன்னாலே எனக்கு வர்ர சோதனைகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். காரணம் உங்கப்பா மந்திரி. நானோ அவருடைய அரசியல் எதிரி.

-இதற்கு அவள் பதிலெதுவும் கூறவில்லை.

போய்த் தாங்கும்மா! நேரமாகுது. காலையிலே பேசிக்கலாம்-என்று அவரே விளக்கை அணைத்துவிட்டுப் போய்விட்டார். . . . . . . . . . . . . . . .

நி-11