166 நிசப்த சங்கீதம்
மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்து அதிகநாள் பழகியவளைப்போல் சேலைத் தலைப்பை வரிந்து கட்டிக்கொண்டு கூடத்தைப் பெருக் குவது, தரையை மெழுகுவது, பாத்திரங்கள் தேய்ப்பது போன்ற வீட்டுக் காரியங்களில் சகஜமாக அவள் ஈடுபட்ட போது சிவகாமிநாதனும், அவர் மகளும் மகனும் அவளைச் செல்லமாகக் கடிந்துகொண்டு தடுத்தார்கள்.
நீ எதுக்கும்மா இதெல்லாம் செய்யறே? ரொம்ப அவசியமா எதாவது செஞ்சுதான் ஆகணும்னாப் பிரஸ் ஸ்-க்கு வா...புரூப் திருத்தக் கத்துக் குடுக்கறேன்... பழகிக்கோ.போறும்'-என்றார் சிவகாமிநாதன். . ஆனால் அவள் அவர்கள்சொல்லியபடி அந்த வேலைகளி. லிருந்து தன்னைத் தவிர்த்துக்கொள்ளவோ, விலகிக்கொள் ளவோ இல்லை. அவற்றையும் செய்துவிட்டு அதன் பின்பு அச்சகப் பகுதிக்குள் நுழைந்து பிழை திருத்தக் கற்றுக் கொடுக்குமாறு சிவகாமிநாதனிடம் கேட்டாள்.
சிறிதும் எதிர்பாராதவிதமாக மாலையில் வருவதாக முதல் நாளிரவு கூறிச் சென்றிருந்த முத்துராமலிங்கம் பகல் பதினொரு மணிக்கே அங்கே வந்து சேர்ந்திருந்தான். மங்கா அவனைக் கேட்டாள்: . - -
சாயங்காலம்தானே வருவேன்னிங்க? இன்னிக்கும் அவுட்டோர் கேன்ஸல் ஆயிடிச்சா?" ... و அவுட்டோர் கேன்ஸல் ஆகலே! என் வேலையே கேன்ஸ்ல் ஆயிடிச்சு. பாபுராஜ் முதலியாரிட்டக் கோள் சொல்லி வத்தி வச்சு என் வேலைக்குச் சீட்டுக் கிழிச்சுப் புட்டான்.'
24 'நான் கூட்டங்களிலே பேசறது-கொள்றதெல்லாம் பாபுராஜுக்குப் பிடிக்கல்ே. நேத்து முனு மணிக்கு உன்னைச் சந்திக்கிறதுக்காக நான் டிரைவ் இன்னுக்குக் கிளம்பிக்கிட்டிருந்தப்ப அவன் லாட்ஜுக்கு ஃபோன்