உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 167

பண்ணி உடனே தன்னை வந்து பார்க்கணும்னான். நான்

போகலே. அதுலே கோபம் போல்ருக்கு."

'சனி விட்டதுன்னு பேசாம இருங்க. வேற வேலை பார்த்துக்கலாம்-என்றாள் மங்கள். சிவகாமிநாதனும் முத்துராமலிங்கத்துக்கு ஆறுதலாகவே இரண்டு வார்த்தை .கள் சொன்னார்: - *

"இந்தவேலை போச்சேன்னு கவலைப்படவேண்டாம். :பார்த்துக்கலாம். என்னாலே முடிஞ்சதைச் செய்யிறேன். இன்னிக்கு இந்த நாட்டிலே வேலை கிடைக்காதோ என்ற எதிர்கால பய்த்திலும் கிடைத்த வேலை போய்விடுமோ -என்ற தற்காப்பு அச்சத்திலுமே முக்கால்வாசி இளைஞர்கள் வீரியமிழந்து நடைப் பிணங்களாகி விடுகிறார்கள். இளைஞர்களால் நாடு அடைய வேண்டிய உத்வேகத்தை அடைய முடியாமல்ே போய்விடுகிறது.'

"உங்களுடையவழிகாட்டுதல் இருக்கிறவரை நானோ மங்காவோ உத்வேகத்தை இழந்துவிடமாட்டோம் ஐயா!' -

"நாளைக்குக் கூட்ட ஏற்பாட்டைக் கவனிக்கனும்,

சுவரொட்டி யெல்லாம் இன்னிக்கே ஒட்டியாகணும். மந்திரியை எதிர்த்துக் கூட்டம் போடறோம். ஏரியாவும் ஒரு மாதிரி. மந்திரி மகளே பேசப் போறாங்கன்னு வேற விளம்பரம் பண்ணியிருக்கோம். கொஞ்சம் கலாட்டாக்கடி

இருக்குமோன்னு சந்தேகப்படறேன்.'

ஏற்பாடெல்லாம் தயாராயிருக்கு. நானும் நண்பர் களும் இன்னிக்கிப் போஸ்டர் ஒட்டப் போறோம்-என் றான் முத்துராமலிங்கம். சிவகாமிநாதன் மங்காவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கூறினார்.

- பதின் மிகளையே த்ன்ன்ன எதிர்த்து மேடையேறிப் பேச வச்சிட்டேர்மேன்னு எங்க மேலே உங்கப்பாவுக்கு ஒரே எரிச்சலா இருக்கும்.'