பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 175

மட்டுமே பகிஷ்கரிப்பது போல் நடந்து கொண்டதால் எல்லாருமே என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிப் போனார்கள். சோடா புட்டிகளும், கற்களும், பழைய செருப்புக்களும் மேடையை நோக்கிப் பறந்தன. ஒரே கூச்சல்-ஆர்ப்பாட்டம். -

மேடையில் தியாகி சிவகாமிநாதன் எழுந்து நின்றார். அவர் மேலும் மங்கா மேலும் எதுவும் பட்டுவிடாமல் தடுக்கிற முயற்சியில் முத்துராமலிங்கம் மேடையில் முன்னால் பாய்ந்து கவசம்போல் கைகளை மறித்து நின்று காத்தான். பறந்து வந்த சோடா பாட்டில்களில் ஒன்றும் கற்களில் சிலவும் அலன் மண்டையில் தாக்கின, மேடையில் இரத்தம் ஒழுக நின்றான் அவன். ஒரு கையால், காயமுற்ற மண்டையை அழுத்திப் பிடித்துக் கொண்டே, தோழர் களே! அமைதி! அமைதி' என்று உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தான் அவன். - -

சிவகாமிநாதன் பதறிப்போனார். சிந்தாதிரிப்பேட்டை யிலேயே கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்துக்கருகில்: இருந்த ஒரு டாக்டரின் தனியார் மருத்துவமனைக்கு முத்து. ராமலிங்கத்தை அவசர அவசரமாக ஒரு டாக்ஸியில் அழைத்துச் சென்றார் அவர். தேசியப்பற்றும் சிவகாமி நாதன்மேல் அபிமானமும் உள்ள் அந்த டாக்டர் முத்து, ராமலிங்கத்தின் காயத்துக்கு மருந்து போட்டுக் கட்டினார். மங்கா அழத் தொடங்கி விட்டாள். சிவகாமிநாதனின் மகளுக்கும் மகனுக்கும் அவளைத் தேற்றுவது சிரமமான காரியமாக இருந்தது. ... . . . .

கூடியிருந்த கூட்டம் கலையமறுக்கவே முத்துராம. லிங்கத்தையும் மற்றவர்களையும். மருத்துவமனையில் விட்டு விட்டுச் சிவகாமிநாதன் மறுபடி பொதுக்கூட்ட

மேடைக்குப் போனார். - o . .

திடீரென்று புயல் ஒன்று வந்து ஓய்ந்து போயிருந்த மாதிரிக் கலகங்கள் ஒய்ந்து கூட்டம் அமைதியடைந்திருந்: தது. கலகம் செய்வதற்கென்றே வந்து ஊடுருவியிருந்தன.

a.