உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 நிசப்த சங்கீதம்

குத் தருவதாகக் கூறினார். மங்கா முத்துராமலிங்கம் குடும். வாழ்க்கையைப்பற்றியும், தியாகியின் குரல் பத்திரிகையின், வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இரவு பதினோருமணிவரை கடற்கரையில் பேசிக்கொண்டிருந்துவிட்டு அப்புறம் வீடு. திரும்பினார்கள் அவர்கள். பல்கலைக்கழக நூற்றாண்டு. விழா மண்டபத்துக்கு வடபுறம் கூவத்தின்கரையை ஒட்டி மவுண்ட்ரோடு செல்லும் சாலை வழியே நடந்தே போய். ஜிம்கானா கிளப் அருகே தெருவைக் கடந்து நேப்பியர் பூங்கா வழியே அவர்கள் சிந்தாதிரிப்பேட்டைக்குள் புகுந்த, போது சிவகாமிநாதனின் இயக்கத் தொண்டர்கள் கூட்ட மாக ஓடி வந்து அவர்களை எதிர்கொண்டார்கள். .

மந்திரி எஸ். கே. சி. நாதனின் பேச்சுக்குப்பின் அந்தப் பொதுக்கூட்டம் முடிந்தபோது திரும்பிய ரெளடிக்கும்பல் ஒன்று வன்முறையில் இறங்கித் தியாகியின் குரல் அச்சகத் தைச் சூறையாடி அச்சகப் பகுதியில் நெருப்பு வைத்து விட்டதாகவும், பலத்த சேதம் ஏற்பட்டும், போலிஸோ, தீயணைக்கும் படையோ உதவிக்கு வரவில்லை என்றும் தொண்டர்களாகிய தாங்களே தீயை அணைத்ததாகவும்: எதிர்கொண்டவர்கள் தெரிவித்தார்கள், -

29

- அச்சகத்துக்குக் காலிகள் நெருப்பு மூட்டிச் சூறை பாடி விட்டுப் போயிருப்பதாக எதிர்கொண்டு வந்த தொண்டர்கள் கூறியவுடன் மங்காவும், முத்துராமலிங்கமும் பதறிப்போய், .

"ஐயையோ, பாண்டித்துரையும், க ஸ் துாரி யு ம் வீட்டிலே இருந்தாங்களே...' என்று சிவகாமிநாதனின் மகனையும் மகளையும் பற்றிக் கவலை தெரிவித்தார்கள்.

அவங்களை முதல்லேயே பத்திரமா ரெண்டு விடு தள்ளிப் பக்கத்திலே வேற மனுஷாளோடு தங்க வச்சிட்