நா. பார்த்தசாரதி 199
ஆழம் அவனுக்குப் புரிந்தன. அதிலுள்ள நியாயமான ராஜ தந்திரமும் புரிந்தது. பக்கா சந்தர்ப்பவாதியான மந்திரி .எஸ். கே. சி. நாதன் அப்போதிருந்த கட்சியின் கொள் கைக்கு ஏற்பக் கலப்பு மணம், சீர்திருத்த மனம், காதல் மணம், பெண்ணுரிமை எல்லாவற்றையும் ஆதரித்து மிகவும் தாராளமாகவே பல மேடைகளில் முழங்கித் தள்ளியிருந் தார். இன்னும்கூட முழங்கிக்கொண்டிருந்தார். அதனால் மங்கா-முத்துராமலிங்கம் திருமணத்தை இடையூறு செய்து திகழவிடாமல் தடுக்க முயன்றால் அவரே எக்ஸ்போஸ் ஆகிவிடுவார். அவரே கலப்பு மணத்தை எதிர்க்கின்றார் என்று பத்திரிகைகளும் எதிரிகளும் அவரைச் சாடும்படி ஆகிவிடும். அதனால் அவர் இந்த மணத்தைத் தடுக்க முயலவே மாட்டார். திருமணம் ஆனபிறகோ தலையிடு வதும், கெடுதல்கள் புரிவதும் சட்டப்படியே சாத்திய மில்லாதவை. இவற்றை எல்லாம் நன்கு யோசித்தே தியாகி சிவகாமிநாதன் இந்த யோசனையைக் கூறுகிறார் என்று இருவருக்குமே புரிந்தது. இருவருமே அந்த ஏற்பாட் டினால் தங்களுக்குக் கிடைக்கிற விருப்பத்துக்கிசைந்த வாழ்வையும் இயல்பான சமூகப் பாதுகாப்பையும் உணர்ந்
தார்கள். -
கடல் அலைகளை வேடிக்கை பார்க்கக் கரையருகே நெருங்கிச் சென்றிருந்த சண்முகம் திரும்பிவந்தார். சிவகாமி நாதனே இந்த யோசனையைச் சண்முகத்திடம் விவரித் தார். கேட்டபின் சண்முகமே மங்காவையும், முத்துராம லிங்கத்தையும் பார்த்து, "இப்ப இருக்கிற சூழ்நிலையிலே இதை விடப் பிரத்யட்சமானதும், பாதுகாப்பானதுமாக வேறொரு யோசனை இருக்க முடியாது. இதனாலே நீங்க. -மகிழ்ச்சியை மட்டும் அடையலே...பத்திரமான வாழ்க்கை
யையும் அடையlங்க...' என்றார்.
காதும் காதும் வைத்தாற்போல ஏற்பாடுகள் நடக்க வேண்டும் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்ட்ார் கள். சண்முகம் தனது முழு ஒத்துழைப்பையும் அவர்களுக்