202 நிசப்த சங்கிதம்
அக்கிரமத்தை ஏன்னு கேட்கப் போறேன். பதில் சொல்: லாட்டி, சி! நீயும் ஒரு மனுசன் தானான்னு மூஞ்சியிலே காறித் துப்பப் போறேன்.' -
'வேண்டாம்! அதனால் ஒரு பிரயோசனமும் ஏற்: படாது' என்றார் சிவகாமிநாதன், அவரது அன்பர்கள் சொன்னார்கள் : - - - o "போலீஸோ, தீயணைப்புப் படையோ எத்தனையோ ஃபோன் பண்ணியும் முதல்லே வரலே. கலவரமெல்லாம்: முடிஞ்சு ரெளடிங்க தப்பிப்போய்ச் சேர்ந்தப்பறம்தான் போலீஸ் தீயணைக்கிறவங்க எல்லாம் வந்தாங்க. அக்கம் பக்கத்துக்காரங்களும், நம்ம் தொண்டருங்களுமா அவங்க: வாரத்துக்குள்ளேயே தீயை அணைச்சிட்டாங்க."
அச்சகத்தைத் துவம்சம் செய்ததிலிருந்து தந்தை யாகிய மந்திரியின் ஊழல்களைப் பற்றி மகள் எழுதும் கட்டுரைத் தொடரை வரவிடாமற் செய்வதுதான் கலவரம் புரிந்தவர்களின் முக்கிய நோக்கமாயிருப்பது தெரிந்தது.
'கற்பைப்பற்றிப் புகழ்ந்து பேசும் விபாசாரிகளைப் போல் ஜனநாயகத்தைப் பற்றிச் சிலாகித்துப் பேசும். சர்வாதிகாரிகள் நிறைந்து விட்டார்கள் இந்த நாட்டில், பதவிப் பசி மிகுந்தவர்களும், பணப்பசி மிகுந்தவர்களும் நல்லவர்களை வேட்டையாடும் காலம் இது. பொறுமையும். சகிப்புத் தன்மையுமே இவர்களை எதிர்க்கப் போது மானவை இல்லை' என்று சீறினான் முத்துராமலிங்கம். வயதுக்கேற்ற ஆத்திரமும் சீற்றமும் அவன் குரலில் இருந்தன. எல்லாருக்கும் நிழல் கொடுத்துக் கொண்டிருக் கும் ஒரு பாவமுமறியாத ஒர் ஆலமரத்தை யாரோ வெட்டி, வீழ்த்த முயன்றாற்போல் உணர்ந்து குமுறினான் அவன்.
சிவகாமிநாதன்மேல் பற்றும் அன்பும் ஆதரவும் உள்ள வேறோர் அச்சக அதிபர் சில வாரங்களுக்குத் தியாகியின் குரலை'த் தாமே அச்சிட்டுக் கொடுப்பதாக ஒப்புக் கொண் டார். அவருடைய அச்சகமும் சிந்தாதிரிப்பேட்டையில்