பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 நிசப்த சங்கீதம்

எஸ். கே. சி. நாதன் பயப்பட்டுப் பதறினார். சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிரிகள் இருந்தனர். -

ஒவ்வோர் இந்திய அரசியல் கட்சியின் பிரமுகருக்கும் இந்தியாவில் இரண்டுவித எதிரிகள் உண்டு. ஒருவகை எதிர்ப்பு-எதிர்க் கட்சிகளிலிருந்து வருவது. மற்றொரு வகை எதிர்ப்பு-சொந்தக்கட்சியிலேயே உள்ள எதிரிகளிட மிருந்து வருவது. இதில் அபாயகரமான எதிர்ப்பு உட்கட்சிப் பூசல்காரர்களிடமிருந்து வருவதுதான். தியாகியின் குரல் கட்டுரைகள் மந்திரி எஸ். கே. சி. நாதனுக்கு எதிராக உட்கட்சிப் பூசல்காரர்களைப் பயங்கரமாகக் கிளப்பி விட்டன. அவரது வளர்ச்சியைத் தடுத்து ஒடுக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த அவரது அரசியல் எதிரிகள் இந்தக் கட்டுரைகளால் உற்சாகமடைந்து செயல்பட்டனர். குதிரை இழே தள்ளியதோடு விட்டுவிடாமல் குழியையும் பறித்த தாம் என்கிற கதையாக மகள் தன்னைப் பிரிந்து தன் எதிர் யிடம் சரணடைந்ததோடு போகாமல் இப்படித் தாக்குதல் கட்டுரைகளை வேறு எழுதத் தொடங்கியது அவரைப் பெரிதும் பாதித்தது. - - - - . . அன்றிரவு சிவகாமிநாதன் முதலியவர்கள் தூங்கச் செல்லும்போது இரவு மூன்று மணி-அதனால் மறுநாள் காலை எல்லோருமே தாமதமாக எழுந்தனர். வாசல் கதவை. யாரோ தட்டுகிற சத்தம் கேட்டு முதலில் எழுந்தவர். சிவகாமிநாதன்தான். -

முதல் நாள் தேடி வந்து அம்பத்தூரில் உறவினர் வீட்டுக்குப் போயிருந்த முத்துராமலிங்கத்தின் பெற்றோர் தான் அப்போது தேடி வந்திருந்தனர்.

முதலில் சிவகாமிநாதன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அவர்கள் அங்கே வந்தபோது மங்கா வும் முத்துராமலிங்கமும் மற்றவர்களும்எழுந்திருக்கவில்லை, பசுங்கிளித் தேவர் சிவகாமிநாதனை விசாரித்து மகனின் rேம லாபத்தை அறிந்து கொண்டார்.