உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 நிசப்த சங்கீதம்

முத்துராமலிங்கத்தின் தாய் அவரைச் சிறிது சமாதானப் படுத்த முயன்றாள். ஆனால் அவர் கேட்கிற வழியா யில்லை.

"இதுக்காகவா பட்டணத்துக்கு வேலைமெனக்கெட்டு உன்னை அனுப்பி வெச்சேன். உங்க மவன் உருப்படவே மாட்டான். அதான் உருப்படாத ஆளுங்களோட போய்ச் சேர்ந்துக்கிட்டு அலையிறான்னு குருசாமி சேர்வையே சொல்றான்.' -

"அப்பா நிறுத்துங்க...இது உங்க வீடு இல்லே! இன்னொருத்தர் இடத்திலே வந்து நின்னுக்கிட்டு அவங் களையே இப்படியெல்லாம் நீங்க விவரம் புரியசமப் பேசப் பிடாது'......என்று முத்துராமலிங்கம் குறுக்கிட்டபோது, * யாரைடா விவரம் புரியாதவன்னு சொல்றே? என்னைத் தானே? நீ செஞ்சிருக்கிறதெல்லாம் ரொம்ப விவரமான காரியமில்லே? அதான் பேசறே ஏன் பேச மாட்டே? இதுவும் பேசுவே, இன்னமும் பேசுவே...... என்ன திமிருடா உனக்கு? - என்று பதிலுக்கு மேலும் கூப்பாடு போட்டு ஆத்திரப்பட்டார் அவர். - -

32

அறிவும், இலட்சியமும், கொள்கை உன்னதமும் கொடுத்துத் தன்னை உயர்த்திய ஞானத் தந்தை சிவகாமி நாதனைச் சார்ந்து நிற்பதா, பணம், உத்தியோகம், பிழைப்பு என்று இவற்றைப் பற்றி மட்டுமே சதா கவலைப் பட்டுப் பேசும் சொந்தத் தந்தையைச் சார்ந்து நிற்பதா என்று முத்துரர்மலிங்கம் ஒரு விநாடி கூட மனம் குழம்ப வில்லை. எதைச் சார்ந்து யாரருகே நிற்க வேண்டும். எதை எதிர்த்து காரை விரோதித்துக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம். அவன் ஏற்கெனவே தீர்மானமாகவும், திடமாகவும் முடிவு செய்திருந்தான். .

இயல்பாகவே குழம்பிப் போயிருந்த தந்தையின் மனத்தை சர்க்கிள், குருசாமி சேர்வை மேலும் குழப் பிவி பு