உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 219

நாயகவாதியான நேரு காலத்திலேயே பணக்காரங்களை நம்பி-அவங்க பணத்திலேதான் கட்சி, தேர்தல் செலவு எல் லாத் தையும் சமாளிச்சிருக்காங்க!'

'உண்மை! இன்றுள்ள நிலையில் நமது அரசியல் ஜன. நாயகம், கட்சி தேர்தல் எல்லாமே பணத்தையும் அதிகாரத் தையும் அடைவதற்காகப் பணத்தையும் அதிகாரத்தையுமே துஷ்பிரயோகம் செய்கிற ஏற்பாடுதானப்பா-'

பகல் ஒரு மணிக்குமேல் பசுங்கிளித் தேவரும், அவர் மனைவியும் சிந்தாதிரிப்பேட்டைக்குத் திரும்பி வந்தார்கள். சிவகாமிநாதன் அச்சகப்பகுதியில் இருந்தார். தாக்கு தலுக்கு ஆளான அச்சகப் பகுதி அப்போதுதான் செம்மைப் படுத்தப் பெற்றிருந்தது. - -

முத்துராமலிங்கம்தான் அவர்களை எதிர்கொண்டான். பசுங்கிளித் தேவர் ஒரேயடியாகக் கூப்பாடு போட்டார். - "மந்திரி மகளைக் கடத்திக்கிட்டுப் போயித் திருட்டுத் தாவி கட்டினியாமே? உனக்கு ஏண்டா இப்பிடிப் புத்தி போச்சு: துப்புக் கெட்டுப் போனியா? ஏதோ நாம ஏழைப் பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்க நீ படிச்சு மானமா ஒரு உத்தியோகம் பார்த்து எங்களைக் காப்பாத்துவேன்னு பார்த்தாத் தலைக்குக் கல்லைக் கொண்டாந்திட்டியே! .... இதெல்லாம் எங்கே போயி நிக்கப் போகுதோ?”

அவரது கூப்பாட்டைக் கேட்டு மங்கா வெளியே வந்தாள். அவரைக் கும்பிடும்படி அவளுக்கு ஜாடைகாட்டி விட்டுத் தானும் அவளருகே சென்று நின்று கொண்டு பெற். றோரை அவளோடு சேர்ந்து வணங்கினான். முத்துராம லிங்கம். -

"திருட்டுக் கலியாணம் பண்ணிக்கிட்டதோடப் போகாம என்னைக் கும்பிட வேறவா செய்யிறீங்க?' என்று சீறினார் பசுங்கிளித் தேவர். - -

"கொஞ்சம் மெதுவாகத்தான் பேசுங்களேன். எதுக்கு இப்படிக் கத்தனும்?......ஊரைக் கூட்டாதிங்க' என்று