உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - - 237

'இன்னொரு வாட்டி அப்படிச் சொல்லாதேம்மா முன்னே ஒருவாட்டி கூட இது மாதிரித்தான் கண்ட கண்ட் எடம்’னு சொன்னே? நீயும் அப்பாவும் இருக்கிற எடத்தை விட இது ஒண்ணும் கொறைவான இடம் இல்லே, ஞாபகம்

வச்சுக்கோ...'

"நான் யாரையும் கொறைச்சுச் சொல்லலேடி.

பின்னே நீ பாட்டுக்கு கண்ட கண்ட இடம்னா என்ன அர்த்தம்?'

-அம்மா விடை பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந் தாள். சிறிது நேரத்துக்கெல்லாம் முத்துராமலிங்கம் கோடம்பாக்கத்திலிருந்து வந்தான். -

மங்கா இன்னிக்கு நான் கொஞ்சம் ஃப்ரி மறுபடி நாளைக்குக் காலைலதான் எனக்கு வேலை. கடற்கரைக்கு போயிட்டு வரலாமா?' х

இந்த மாதிரி ஓய்வு கிடைத்து அவன் இப்படி அவளைக் கேட்பதே அபூர்வம். அவள் மலர்ச்சியோடு சம்மதித்தாள். தியாகி சிவகாமிநாதன் அப்போது வீட்டில் இல்லை. வக்கீல் வீட்டுக்கு ஒரு வழக்கு விஷயமாகப் பேசப் போயிருந்தார். கஸ்தூரியும், பாண்டித்துரையும் மட்டுமே வீட்டிலிருந் தார்கள். கஸ்தூரியும் சமையலறையில் ஏதோ கைக்காரிய மாக இருந்தாள். பாண்டித்துரை அச்சகத்தில் அச்சுக் கோத்துக் கொண்டிருந்தான். - - -- மங்காவும் முத்துராமலிங்கமும் அவர்கள் இருவரையும் கூடக் கடற்கரைக்குக் கூப்பிட்டுப் பார்த்தார்கள்.

வீட்டைப் பூட்டிக்கிட்டுப் போறத்துக்கில்லே. யாரா வது தேடி வருவாங்க...அப்பாவும் வக்கீல் வீட்டுக்குப் போயி, ருக்காரு...நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க. நாங்க வீட்டைப் பார்த்துக்கிறோம்’-என்று மறுத்துவிட்டார்கள்

அவர்கள் இருவரும்.