23.8 நிசப்த சங்கீதம்
முத்துராமலிங்கமும் மங்காவும் கடற்கரைக்குப் புறம் பட்டார்கள். கடற்கரையில் கூட்டமே இல்லாமல் ஓர் ஒதுக்குப்புறமான மூலையை தேடி அவர்கள் அமர்ந்தபோது. இரவு எட்டு மணிக்கு மேலாகியிருந்தது.
அன்று என்னமோ கடற்கரை அவர்களுக்காகவே. ஒழித்து வைத்த மாதிரி இருந்தது. கூட்டமே இல்லை.
தன் வீட்டிலிருந்து அம்மா தேடி வந்து விட்டுப் போனதை அவனிடம் சொன்னாள் அவள். அவள் வீட்டுக் குக் கூப்பிட்டதையும் தெரிவித்தாள். அ.முத்தலாக அவன் பதிலுக்குக் கேட்டான். . . .
"உனக்கு இஷ்டம்னாப் போயிட்டு வர்ரதுதானே?" 'எனக்குன்னு தனி இஷ்டம் எதுவும் கிடையாது: உங்களுக்கு இஷ்டமில்லாதது எனக்கும் இஷ்டமா இராது. உங்களுக்கு இஷ்டம்னா அது எனக்கும் இஷ்டமாத்தான் இருக்கும். -
'உள்ளதைச் சொன்னா உங்கம்மாவோட நீ போகாத துலேதான் எனக்குத் திருப்தி மங்கா."
'அம்மா அப்பா மாதிரி மோசம் இல்லே. ஆனாலும் அந்த வீட்டுக்குப் போக எனக்கு இஷ்டம் கிடையாது. தந்திரமா அம்மா மூலம் கூப்பிட்டுக் கொண்டு. போய். அங்கே வேற விதமா ஏற்பாடு பண்ணி, என்னை ஒரு ரூம்லே தள்ளிக் கதவைப் பூட்டினாலும் பூட்டிடுவாங்க."
"உங்க வீட்டைப் பத்தி நீயே இப்படிப் பயப்படும்படி, அத்தினி மோசமாஇருக்கு மங்கா அது! இல்லியா... என்ன நான் சொல்றது. சரிதானே...?' -
எங்கப்பா வெளி நாடு போயிருந்தாலும் அவரை நம்பறத்துக்கில்லே. இப்பிடித் தந்திரமா ஏற்பாடு பண்ணிட் டுப் போனாலும் போயிருப்பாரு...' -
இருப்பாங்க.நாம கஷ்டப்பட்டப்ப எங்ககூடத் தான்