பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 நிசப்த சங்கீதம்

பாதி விபசாரமாகப் பயன்படுகிறது' என்று அடிக்கடி சிவ. காமிநாதனே மனம் கசந்து கூறுவதுண்டு.

அதனால் அவருக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப் பட்ட அந்த மணிவிழாவை அவர்கள் மிக எளிமையாக, நடத்தி முடித்தார்கள். -

வீடு அச்சகம் ஆகியவற்றை உடனே கடனிலிருந்து விடுவித்து ஜப்தியாகாமல் காப்பாற்றினார்கள். பத்திரிகைக் காக் ஓர் அச்சியந்திரம் வாங்கப்பட்டது.

மறுமாதமே தம் மகள், கஸ்தூரிக்கு எளிய முறையில் திருமணம் முடித்தார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம், மங்கா திருமணத்தைப் போலவே அதுவும் மாங்காடு கோவிலில்தான் நிகழ்ந்தது. பெங்களுரில் ஏதோ ஒரு. தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான யமான நல்ல தொழிலாளி ஒருவனுக்குத்தான் தன்னுடைய மகளை மணமுடித்துக் கொடுத்திருந்தார் அவர். மகளைக் கணவன் வீட்டுக்கு அனுப்பிய பின்பு பத்திரிகை வேலை களிலும், பொதுப்பணிகளிலும், போராட்டங்களிலும் தீவிரமாக இறங்கினார்.அவர். இப்போது வீட்டில் அவருக்கு: உதவியாக மகன் பாண்டித்துரையும், மங்காவும், முத்து ராமலிங்கமுமே இருந்தார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மங்கா ஏற்றுக் கொண்டிருந்தாள். அரசாங். கத்தையும், ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் பத்திரிகை யாக இருந்ததனால் "தியாகியின் குரல் பத்திரிகை பரபரப் பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. மங்கா தன் தந்தை. யாகிய மந்திரியின் ஊழல்களை விமர்சித்து எழுதுகிறாள். என்பது அந்தப் பத்திரிகையின்மேல் மக்களின் கவனம் திரும்புவதற்கான மற்றொரு புதிய காரணமாயிருந்தது.

நாடு முழுவதுமே பொது நலனுக்காக உழைப்பவர் களின் தொகை குன்றிக் கட்சிகளின் நலனுக்காகவும் சுயநல: லுக்காகவுமே உழைப்பவர்கள் பெருகியிருந்தார்கள். மக்கள் நல்னைவிடப் பதவி.நலன்தான் எங்கும் எல்லாருக்கும் பெரி தாயிருந்தது.கட்சிகள் என்பவை கொள்ளைக்கூட்டங்கனை.