உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

愛56 நிசப்த சங்கீதம்

பத்திரிகையையும் இயக்கத்தையும் கவனித்துக்கொள் ளும் பொறுப்பை முத்துராமலிங்கம், மங்கா. சண்முகம், மகன் பாண்டித்துரை ஆகியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு: சிறிதும் கலங்காமல் சிறைக்குச் சென்றார் அவர்.

நீதிமன்றத்திலிருந்து அவரைச் சிறைச்சாலைக்கு வழி யனுப்பிவிட்டு முத்துராமலிங்கமும், மங்காவும், சண்முக மும், பாண்டித்துரையும் மற்றத் தொண்டர்களும் வீடு திரும்பியபோது நகரமே நிசப்தமாகி விட்டதுபோல் ஒரு. பிரமை நிலவியது..

வேலை தேடிச் சென்னை நகருக்குள் நுழைந்த முதல் தினத்தன்று இருந்த அதே உணர்ச்சிதான் இன்றும் முத்து, ராமலிங்கத்துக்குள்ளே இருந்தது. -

ஆயிரம் கைகள் முளைத்து அந்த ஆயிரம் கைகளாலும் அநீதியை எதிர்த்துப் போரிட வேண்டும். ஒயக்கூடாது. ஒழியக்கூடாது! வீழக்கூடாது. தாழக்கூடாது. தயங்கவும் கூடாது! தளரவும் கூடாது. - r -

சிவகாமிநாதனின் வழக்கு விசாரணைத் தீர்ப்பும் சிறை வாச விவரமும் வெளியாகி இருந்த அன்றைய மாலைத் தினசரியில் மற்றொரு பத்தியில், இராயப்ப்ேட்டை விய சார விடுதியில் நளினி என்னும் இளம்பெண் மண்ணெண் ணையை ஊற்றித் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலை-என்ற செய்தியையும் முத்துராமலிங்கம் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது.

நல்லதோர் வீணை செய்தே அதை நலங் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?-- என்ற அந்த இனிய குயிற் குரல் அவன் நினைவில் மீண்டும். ஒலித்தது. அவளுடைய முகம், புன்னகை, சோகம் கலந்த: பார்வை எல்லாமே அவனுக்கு நினைவு வந்தன. -

அதே விபசார விடுதி வாசலில் தலைவிரி கோலமாகக் கிழிந்த உடைகளோடு, "ஐயோ! என்னை விட்டுடு விட்டு டு கொன்னுப்புடாதே'-என்று "அபலைகள், அநாதைகள்,