இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
盛54 நிசப்த சங்கீதம்
ஒவ்வொரு சோக நிசப்தமும் ஒரு கவிதையைக் கருக் கொண்டிருக்கிறது. ஒவ்வோர் அமைதியும் ஒரு சலனத்தைக் கருக்கொண்டிருக்கிறது. அதைத் துணிந்து கலைக்கிறவரை காத்திருக்க வேண்டும் என்ற மன எழுச்சியோடு அவன் வீடு திரும்பினான்.
அவன் சிந்தாதிரிப்பேட்டையை அடைந்து வீட்டுப் படியேறியபோது உள்ளே வானொலியிலிருந்து ஒளி படைத்த கண்ணினாய் வா வா.உறுதிகொண்ட நெஞ்சி னாய் வா...' என்று பாரதியாரின் பாடல் ஒலித்துக் கொண் டிருந்தது. வீட்டின் நிசப்தத்தை ஏற்கெனவே கலைத் திருந்த அந்த நம்பிக்கைச் சங்கீதம் இப்போது அவன் மனத் தின் நிசப்தத்தையும் முழுமையாகக் கலைத்தது. அவன், மங்கா, சண்முகம் முதலிய அனைவருமே அடுத்துச் செய்ய வேண்டிய செயல்களுக்காகத் தயாரானார்கள். -
а о п