நா. பார்த்தசாரதி 29
வரேன். சார்' என்று ரிக்ஷாக்காரன் தானாகவே அவசரப் பட்டு நழுவி விரையலானான். -
"சர்க்கிள் குருசாமி சேர்வை வீடு இதுதானே?" "ஆமாங்க...நீங்க யாரு?" - - 'அவங்களுக்கு வேண்டிய உறவுக்காரங்க குடும் பத்தைச் சேர்ந்தவன்.....பார்க்கணும்.' - - உள்ளார இருக்காரு போங்க"-கூறிவிட்டுக் கான்ஸ் டபிள் வெளியே சென்றுவிட்டான். -
தோற்றத்திலேயே மிரட்டவும், எதிரே நிற்கிறவர்களை விரட்டவும் முடிந்த மீசையோடு கூடிய ஒரு நடுத்தர வயது மனிதர் வீட்டு உடையில் சோபாவில் அமர்ந்து ஆங்கிலத் தினசரியை உன்னிப்பாகப் படித்துக்கொண்டிருந்தார்.
ஆண்பிள்ளைகள் போல் இறுக்கமான சட்டையும் “பெல்சும் அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி மாமிச மலையாக வளர்ந்திருந்த உயரமான நாய் ஒன்றிற்கு ரொட்டித் துண்டு போட்டுக்கொண்டிருந்தாள். அவள் ரொட்டித் துண்டை உயரே உயரே தூக்கிப் பிடிக்க நாய் இரண்டு காலில் ஊன்றிக்கொண்டு மற்ற இரண்டு கால் களையும் உயர்த்தி ரொட்டியைத் தாவிப் பிடிக்க எம்பி முயன்றுகொண்டிருந்தது. -
இந்நிலையில் எப்படிக் கூப்பிடுவது-யாரைக் கூப்பிடுவது என்று தயங்கி நின்றான் முத்துராமலிங்கம்.
புது ஆள் வாடையை உணர்ந்துவிட்ட நாய் குபிரென்று உச்ச ஸ்தாயியில் குரைத்தபடி திரும்பி அவனை நோக்கிப் :பாய்ந்தது. - . . . . . .
"ஹாய் டைகர் கீப் கொயட்'-என்று அப்போது அந்தப் பெண் அதைக் கூப்பிட்டுத் தடுத்தாள். -
- 4
- அவர்தான் குருசாமி சேர்வையாக இருப்பார் என்று முத்துராமலிங்கம் கருதிய மீசைக்கார மனிதர் ஆங்கிலத் தினசரியைப் படிப்பதிலிருந்து விலகி நிமிர்ந்து அவனைப்