உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 o நிசப்த சங்கீதம்

போக அவனுக்கு விருப்பமில்லை. அரசியல்வாதிகள் தங்கி யிருக்கும் அறை எந்த லாட்ஜில் இருந்தாலும் அது ஆஸ்பத்திரி ஜெனரல் வார்டு மாதிரி ஆரோக்கியமற்ற நெருக்கடி நிரம்பியதாக இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும்.

யோசித்தபடி சாலைகளில் திரும்பி நடந்து சந்துபோல தோன்றிய ஒரு காம்பவுண்டுக்குள் துழைந்தபோது .ெ கா. ஞ் ச ம் இருட்டாயிருந்த ஒரு பகுதியிலிருந்து, 'இன்னாப்பா பட்டை...வ்ோணுமா'-என்றுகுரல்வந்தது. கேள்வியும் பட்டினத்துப் பைந்தமிழும் புரியாவிட்டாலும் குப்பென்று வீசிய சாராய வாடை புரிய வைத்தது.

'இது எந்தத் தெரு?" -

தெருவா?... யார்ராவன்...? இது கிருஷ்ணாம் பேட்டைச் சுடுகாடுப்பா'...... *.

முத்துராமலிங்கத்துக்குத் திகைப்பு எதுவும் ஏற்பட வில்லை என்றாலும் வழி தவறி வந்துவிட்டோம் என்று தோன்றியது. அவன் திரும்ப முயன்றதும் உட்பக்கமா யிருந்து டார்ச் லைட்டுடன் வந்த மற்றொரு மனிதன், 'இன்னாப்பா அவசரம்? உள்ளே வா' என்று இவனை அழைத்தான். . - -

எனக்கு இங்கே வேலையில்லை'...... என்று வெளி யேற முயன்ற அவனை அவன் மீண்டும் வற்புறுத்தி, -

'அட சும்மா வாப்பா! நீ இன்னா பிஸினஸ்'னு நம்பளுக்குப் புரியாமயில்லே...வா...சொல்றேன்' என்றான். டார்ச்லைட் ஆள் என்ன கூறுகிறான் எதைப் பற்றிக் கூறுகிறான் என்று முத்துராமலிங்க்த்துக்குப் புரியவில்லை.

முத்துராமலிங்கத்தின் கையிலிருந்த சூட்கேஸ்ை வாங்க முயன்று கை நீட்டியபடியே, - - , - ..."

'சரக்கு வந்திருக்கா? இன்னிக்கு சரக்கு வரவேண்டிய நாள் னுதான் நானே காத்திருக்கேன்' என்றான் அந்த ஆள்.