பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

அரசியல், அரசியல்ால் பாதிக்கப்படும் சமூக நியா பங்கள், மனிதர்கள். இவர்களைப் பற்றி எழுதுவதே தகாத காரியமாகக் கருதப்படுகிறது. எழுதுபவர்களால் கூசி ஒதுக் கவும் படுகிறது.

கல்லூரி நாள் தொடங்கி நம் இளைய தலைமுறையை அரசியலும், அரசியல் தலைவர்களும் எவ்வளவுதான் பாதித்தாலும் அதைக் கதையாக எழுத மட்டும் தயங்கு கிறார்கள். வாழ்வில் நடக்கலாமாம். ஆனால் கதையில் மட்டும் கூடாதிாம், - -

இந்தத் தயக்கத்தைக் கூடியவரை தவிர்த்திருப்பவன் நான். தகர்த்திருப்பவன் என்று கூடச் சொல்லிக் கொள்ள லாம். - - - - என்னுடைய நெஞ்சக்கனல், சத்திய வெள்ளம். பொய்ம்முகங்கள். நிசப்த சங்கீதம் ஆகிய நாவல்கள் இதற்குச் சாட்சியாக நிற்பவை.

சும்மா கதை பண்ணுவது எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை. வாழ்க்கையிலும் அதன் அன்றாட யதார்த் தங்களிலும் காலூன்றி நிற்காத கதாபாத்திரங்களால் எந்தப் பயனுமில்லை என்பதைப் படைப்பாளிகளுக்கும் படிப்பாளிகளுக்கும் புரியவைத்தாகவேண்டும். -

இலஞ்சம், பதவிப் பித்து, பேராசை, ஏமாற்று, துரோகம், வஞ்சகம் ஆகிய எதிர் மறைக் குணங்களைப் பற்றி எதை எழுத முயன்றாலும் நம்முடைய அன்றாட யதார்த்தங்களைத் தொடாமல் அதைச் செய்யமுடியாது.

நம்முடைய அன்றாட யதார்த்தங்களை எழுதக் கூசி, னால் மேற்படி விவகாரங்களை எழுத்திலிருந்தே ஒதுக்கி விட வேண்டியதுதான். - . . . . . .

அன்றாட யதார்த்தங்களை ஒதுக்குவதோ, அவற்றி, விருந்து தானே ஒதுங்குவதோ சமூகப் பொறுப்புள்ள ஒரு படைப்பாளி செய்யக்கூடாத காரியமாகும்.

இப்படி ஒதுங்குவதாலும், ஒதுக்குவதாலும்தான் பல எழுத்தாளர்களுக்கு இப்போது கருத்துப் பஞ்சம் அல்லது