உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நிசப்த சங்கிதம்

அயற்றவர்களாகப் போய்விட்டார்களே என்றும் கொதித் தான் அவன். பொருளாதாரத் திட்டங்கள் போட்டு மக்களையும் நாட்டையும் முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கள் தங்களது பதவிக் காலத்துக்குள் வெரைட்டி என்டர் டெயின்மெண்டுகள்' போலவும் "ஃபேன்ஸி டிரஸ் காம் பெடி ஷன் போலவும் எதை எதையோ நடத்தி வாண வேடிக்கை காட்டிவிட்டுப் போகிறார்களே என்ற உறுத்தல் மக்களுக்கே இல்லாமற் போய்விட்டதே என்றுதான் அவனுக்குக் கவலையாயிருந்தது.

- இப்போது நீங்கள் வெகுநேரமாக ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் கலையரசி குமாரி கண்மணி பேசுவார்.' -

என்று ஒலிபெருக்கியில் பெயர் அறிவிக்கப்பட்டதும் ஒரே விசில்கள் மயமாக எழுந்து எதிரொலித்தன. கூட்டத்தில் ஆவலோடு கூடிய வரவேற்கும் முறையிலா கைதட்டல் ஒலிகளும் வெள்ளமாக எழுந்தன. . -

முத்துராமலிங்கம் ஜகஜ்ஜோதியாக மின் னி ய மேடையை நிமிர்ந்து பார்த்தான்.

அந்த வெளிச்சத்தில் மைக்கின் முன் கண்மணி தேவ லோக சுந்தரியாக வந்து நின்று மினுக்கினாள். -

அண்ணன் அவர்களுடைய காலத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து நடக்கும். நேற்றுவரை ஆட்சியை நடத்திய ருத்தி ராட்சப் பூனைகளின் ஜம்பம் இனிமேல் சாயாது. யானை கள் இன்று ஆள வந்திருக்கிறார்கள். ஞாபக ம் இருக்கட்டும்.' х

ஒரே கை தட்டல் மயம், காது கிழிபடுகிறாற்போல் விசில் ஒலிகள். கண்மணிக்கு அந்தக் கூட்டம் அப்படி ஒர்ே. யடியாக வசியப்பட்டு மயங்கியது.