உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 49

முத்துராமலிங்கத்துக்குப் பொதுக் கூட்டத்தைக் கேட்கப் போகும் ஆசையைவிட வழிதெரிந்த அவர்களோடு கடற்கரைக்கு நடந்து போய்விட்டால் அப்படியே தங்கள் ஊரிலிருந்து வந்த லாரி நின்று கொண்டிருக்கிற இடத்தை யும் கண்டுபிடித்துவிடலாம் என்று தோன்றியது. அவனும் அவர்களோடு புறப்பட்டான். -

கடற்கரையில் இரவைப் பகலாக்கியிருந்தார்கள். எங்கு, பார்த்தாலும் குழல் விளக்குகளின் ஒளி கண்ணைப் பறித்தது. அப்பாவி மக்கள் மழையில் நனைந்தபடி ஆட்டு மந்தையாகக் கூடி அர்த்தம் புரியாமலே கைதட்டியும் கேட்டும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். - - -

"வறுமையை ஒட ஓட விரட்டி வேலையில்லாத். திண்டாட்டத்தைத் திண்டாட வைத்து நாடெங்கும் சுபிட்சம் பொங்கச் செய்வோம். தெருவெல்லாம் தமிழ்ப் பேரறிஞர்களுக்குச் சிலைகள் வைப்போம். ஊரெல்லாம் பட்டி மன்றங்களும், கவியரங்கங்களும் நடத்துவோம். கூவம் நதிக்கரை எங்கணும் குளிர்பானக் கடைகளைத் திறந்து வைப்போம்' என்று மகத்தான பொருளாதாரத் திட்டங்களை மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார் ஒரு பேச்சாளர். . -- .

முத்துராமலிங்கத்துக்கு மனம் குமுறியது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அத்தியாவசியப் பிரச்னைகளைக்கூட முப்பதுக்கும் மேற். பட்ட ஆண்டுகளாக வெறும் பிரசங்கப் பண்டங்களாகவே வைத்திருக்கும் இந்நாட்டு அரசியல்வாதிகள் அத்தனைப் பேரும் கடைந்தெடுத்த எத்தர்கள் என்று அவனுக்குத் தோன்றியது. . * . . .

எதை எதை ஒழிக்கப் போவதாக அவர்கள் ஒவ்வொரு பிரசங்கத்திலும் கூறிக் கொண்டிருந்தார்களோ அதை வைத்தே சொந்தப் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இந்நாட்டு மக்கள் திராணி