48 நிசப்த சங்கீதம்
இங்கோ, சர்வசகஜமாகச் சகல இடங்களிலும் நடக்கிற சகலமும் மயானத்திலும் நடந்து கொண்டிருந்தன. உண்பது, பருகுவது, உறங்குவது, வாழ்வது எல்லாமே
மயானத்திலும் நிகழ்ந்து கொண்டிருந்தன.
ஒவ்வொரு பெரிய நகரமுமே ஒரு கலாசார மயானம் என்பதுதான் முத்துராமலிங்கத்தின் கருத்து.
பழைய கலாசாரங்களின் இடுகாடுகளாகவும், மூத்த பழக்க வழ்க்கங்களின் சுடுகாடுகளாகவும் இன்று புதிய பெரு நகரங்கள் இருந்தன. -
சுயதன்மைகளையும், வாசனையையும், அடையாளத் தையும், ஆதாரத்தையும் இழப்பதற்குத்தான், காஸ்மா பாலிடனாக இருப்பது என அழகான பெயர் சூட்டப் பட்டிருப்பதாகத் தோன்றியது. - - - இந்தியாவின் நாட்டுப்புறத்து ஊர்களில் மயானங்கள் என்பவை ஊரிலிருந்து விலகியிருக்கும். சென்னையைப் போன்ற நகரங்களில் பகுதிக்கு ஒரு கறிகாய் மார்க்கெட், பகுதிக்கு ஒரு கோயில், பஜார் என்றிருப்பதுபோல் மயானங்களும் இருந்தன. மயானங்களும், மனிதர்களும் அருகருகே இருந்தார்கள். - வாட்ச்மேன் அழுக்கடைந்த அலுமினியம் டம்ளரிலே கால் டம்ளருக்குச் சற்றே அதிக அளவு இருக்கும்படி சுடச் சுடத் தேநீரை ஊற்றிக் கொண்டுவந்து கொடுத்தான்.
அந்த நேரத்துக்கு, அந்தச் சூழ்நிலையில் தேநீர் மிகவும் இதமாகவும் ருசியாகவும் இருந்தது.
கடற்கரைப் பக்கமிருந்து ஒலிபெருக்கிக் குரல்கள் காற்றில் மிதந்து வந்தன. . - - -
மீட்டிங் போகலாம் வாங்கப்பா'... என்றான் சாராயப் பிரமுகன். அந்த மழைத்துாறலிலும் கடற்கரை ஆயில் வெற்றி விழாக் கூட்டம் பிரமாதமாக நடந்து கொண் -டிருந்தது போலிருந்தது.