நா. பார்த்தசாரதி 47
வாட்ச்மேனும் அவனுடைய உதவியாளனும், 'மழை வேற, பேஜாராப் போச்சு. இண்ணைக்குத் தூங்கினாப் லத்தான்...டீக்குக் காசு குடுப்பா'- r .
என்று சாராயப் பிரமுகனிடம் காசு கேட்டார்கள். - 'இந்த வாரத்துக்குள்ளார்வே உனக்குப் பதினஞ்சு ரூபாய்க்கு மேலே குடுத்தாச்சு! இனிமே ஒரு பைசாக்கூடப் பேராதுப்பா'- - - - . . . . . என்று கறாராக மறுத்தான் சாராய ஆள். வாட்ச் - மேனோ அவனை.மேலும் மேலும் விடாமல் கெஞ்சினான்.
வயிற்றுப்பாட்டுக்காக ஒர் எட்டணாக் காசு வேண்டும் என்று மன்றாடி அவன் தவிப்பதும் கறாரான வியாபாரி அதைத் தர மறுத்துப் பிடிவாதம் பிடிப்பதும் முத்துராம லிங்கத்துக்கு என்னவோ போலிருந்தன. . . . -
வலுவுள்ள ஒரு முரட்டு மனிதன் இன்னொரு நலிந்த மனிதனைக் கழுத்தைப் பிடித்து நெரிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாத இரக்க குணம் நிறைந்த மற்றொரு வலியவனைப்போல் தன்னளவில் அவனுக்கு உதவ. வேண்டும் என்று உணர்ந்தான் அவன்.
ஒன்றும் பேசாமல் பையிலிருந்து ஒர் எட்டணாக் காசை எடுத்து அவனிடம் நீட்டினான் முத்துராமலிங்கம். -
அதைக் கையில் வாங்கிக்கொண்டு நன்றியுணர்வோடு, 'சார்! உனக்கும் ஒரு சிங்கிள் வாங்கியாரட்டா' என்று முத்துராமலிங்கத்தை வினவினான் மயானக் காவல்” காரன். முத்துராமலிங்கம் வேண்டாமென்று சொல்ல. வில்லை. அவனுடைய மெளனத்தைச் சம்மதமாகப் புரிந்துகொண்டு வாட்ச்மேன் டீ வாங்கி வரப் போனான்.
மரபுகளிலும், பாரம்பரியத்திலும், பழமையான பழக் க.
வழக்கங்களிலும் தழும்பேறிப் போன அவனுடைய கிராமத்.
தில் மயானத்தில் வைத்துச் சர்ப்பிடுவதுகூடப் பாவம். என்று நினைப்பார்கள். - - -