7.
பிளேடால் கீறி விட்டு ஓட முயன்ற ஆளை நொடியில் தானே தாவிப் பிடித்துவிட்ட முத்துராமலிங்கம், குட்கேசை கிருஷ்ணாம்பேட்டை ஆளிடம் கொடுத்துவிட்டு முஷ்டியை மடக்கி ஓங்கி ஒரு குத்து விட்டான். . . . .
பிளேடால் கீறுவது, கத்திரிக்கோல் போடுவது போன்ற ஒளிவு மறைவான வஞ்சக வேலையில்லாத-நேரடியான அந்த அசல் நாட்டுப்புறத்துத் தாக்குதலைத் தாங்க முடியாமல், ஐயோ என்று அலறிச் சுருண்டு விழுந்தான் எதிரி. கிருஷ்ணாம்பேட்டையிலிருந்து உடன் வந்திருந்த ஆட்களும் முத்துராமலிங்கத்தோடு சேர்ந்து கொள்ளவே, சண்டை வலுத்தது. . . .
தற்செயலாக அதே பகுதியில் முத்துராமலிங்கத்தோடு தேனியிலிருந்தே லாரியில் உடன் வந்திருந்தவர்கள் சிலரும் அமர்ந்திருக்கவே, அவர்களும் எழுந்து வந்து சேர்ந்து கொண்டார்கள். வேறு சில பொது மனிதர்கள் சண்டையை விலக்கிவிட வந்தார்கள், -- : . .
"தோழர்களே! அமைதி, அமைதி கட்டுப்பாடு காத்துக் கண்ணியத்தைப் போற்றி கடமை வழி நிற்க வேண்டுகிறேன்'-என்று மேடையிலிருந்தே ஒலி பெருக்கி மூலம் கண்மணி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தபடி, இருந்தாள். யாருக்கும் யாருக்குமிடையே கலகமென்ழ் அவள் அறிந்திருக்க நியாயமில்லை. - -
கும்பல் கூடி முத்துராமலிங்கத்தைச் சூழ்ந்து கொண்டு விட்டதால், மேடையிலிருந்து கண்மணி அவனைப் பார்க்க முடியவில்லை.
இரண்டொருவர் ஓடோடிப் போய் கடற்கரை உள் சாலையில் வெற்றி விழாவுக்காக வந்து நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றிலிருந்து முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து ஆத்துராமலிங்கத்தின் கையில் மருந்து தடவி பிளாஸ்திே ஒட்டினார்கள்.
நி-4)