உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - நிசப்த சங்கீதம்

கீழ்ப் பகுதியில் நடுக்கூடத்தில் அவன் கண்ட காட்சி: முன்பே எதிர்பார்த்ததுதான். அங்கே நாலு பெண்கள் அலங்கோலமான தி ைல யி ல் நின்றார்கள். இரண்டு: கான்ஸ்டேபிள்கள் அவர்களருகே காவலுக்கு நின்றார்கள். முன்பே அவன் அநுமானித்தது போல் ஆயாக் கிழவி' உட்பட மற்ற எல்லோரும் தப்பி ஓடிவிட்டிருந்தார்கள். தாய் மட்டும் ஓடாமல் தோட்டத்தில் கட்டிய இடத்தில் லிருந்தே குரைத்துக் கொண்டிருந்தது. சுயநலமும் பயமுமே உள்ள மனிதர்களை விட அவை என்னவென்றே புரியாத, நல்ல மிருகங்கள் எவ்வளவோ உயர்ந்தவையாக இருக்க, வேண்டும் என்று அந்த நிலையில் அவனுக்குத் தோன்றியது:

'ஏய்! நில்லு...ஒடினா உதைபடுவே' என்ற கூப்பாட். டுடன் ஒரு கான்ஸ்டபிள் முத்துராமலிங்கத்தைப் பிடிக்க் விரைந்து ஓடிவந்தான். முத்துராமலிங்கம் திமிறிக்கொண்டு: ஓடாததும் தப்ப முயலாததும் அந்தப் போலீஸ்காரனுக்கே. ஆச்சரியத்தை அளித்த்ன. முத்துராமலிங்கம் அருகே வந்ததும் அந்தப் பெண்களின் கூட்டத்தில், நல்லதோர் வீணை பாட்டுப் பாடிய அந்த நளினி இல்லாததைக் கவனித்தான். அவள் தப்பிவிட்டாளோ என்ற எண்ணத் தோடு கூடத்தின் இருபுறமும் இருந்த அறைகளைக் கவனித்தபோது ஒர் அறை அடைந்திருந்ததும் அதன் வாயிலில் போலீஸ்காரன் ஒருத்தன் காவல் நிற்பது போல்: கதவில் சாய்ந்திருந்ததும் பார்வையில் பட்டன. அந்த அறை: வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கிய முத்துராமலிங்கத், தைப் பெண்களுக்குக் காவல் நின்ற போலீஸ் தடுத்தான்.

'ஏய்! இப்பிடி நில்லு நீ அங்கே போகப்படாது...'

அவனது தடையுத்தரவைப் பொருட்படுத்தாமல்: முத்துராமலிங்கம் அந்த மூடப்பட்ட அறை வாயிலை நெருங்கி, உள்ளே யாரு இருக்காங்க...' என்று வாயிற். படியில் காத்துக் கொண்டிருந்த கான்ஸ்டேபிளிடம் நிதான மாகக் கேட்டான். - ... ;