பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி g 7

அது பங்காளிச் ಆನೆ'r೧-1 நம்ப மேலிடத்துக்கு. வேண்டிய ரெண்டு எம். எல். ஏ. கட்சிமாறி எதிர்த் தரப் புக்குப் போயிட்டானுவ...அந்த ஆத்திரத்தில் நடந்திச்சு." 'எம். எல். ஏ. யா ஆறதுக்காக ஒட்டை விலைக்கு வாங்கறாங்க. எம். எல். ஏக்களை கட்சிங்க விலைக்கு வாங்குது. கட்சிங்களைப் பணமுள்ளவன் விலைக்கு வாங்க றான். இப்படியே போனா விற்க முடியாததும், வாங்க முடி யாததும் இந்த தேசத்துலே ஒண்ணுமே மீதம் இல்லேன்னு தானே ஆகுது...' - - . . . . -

"நல்லாச் ச்ொன்னேப்பா...அதுதான் நெஜம். சிறிது நேரம் கழித்து முத்துராமலிங்கத்தின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு இன்னொரு காரியமும் செய்தான் சின்னி. சில்க் ஜிபாவும் கழுத்தில் தங்கச் செயினுமாக ஒர் அறையிலிருந்து வெளிப்பட்ட ஒரு நடுத்தர வயது மனிதரை அழைத்து வந்து முத்துராமலிங்கத்துக்கு அறிமுகப் படுத்தினான். . . . - . . . . . . . . . . .

நம்ப வைரவன் சார் இந்த ஊர்லியே பெரிய பப்ளிஷர். கொண்டிச் செட்டி தெருவிலே பெரிய புக் ஷாப் வேற வச்சிருக்காரு, இவரு மனசு வச்சா உனக்கு ஒரு வேலை தர முடியும் ' -

அவர் சின்னியைக் கேட்டார் : 'தம்பி யாருன்னு சொல்லலியே..!"

முத்துராமலிங்கம். நமக்கு ரொம்ப வேண்டியவரு. எம். ஏ. படிச்சிருக்காரு...நீங்கதான் பார்த்து ஒரு வேலை போட்டுக் குடுக்கனும்...' - - ‘. . . . . . .

'எந்தப் பக்கம்?..." - 'மதுரை-ஆண்டிப்பட்டி...'

"மதுரைன்னா...வந்து...' -எந்த ஜாதி என்று தெரிந்து கொள்ளத் தவித்து வெளிப்படையாக அதைக் கேட்கவும் முடியாமல்,