பக்கம்:நிதர்சனங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தீபாவளிக் கடவுள்

கொள்ளே காலம் வில்க் எம்போரியம் சிரித்துக் கொண்டிருந்தது. சிரிப்பிற்கென்ன கேடு, சிரிப்பிற்கு? தீபாவளி வாசலுக்கு நெருங்கி வந்து கொண்டிருக்கிற தல்லவா?

வேலையன் சிரித்துக் கொண்டிருந்தான். தன்னை மறந்து-எதிரே ஒளியில் மூழ்கி, நாகரிகத்தின் எல்லைக் கல்லாய், பணப் பெருக்கத் திற்கு ஒரு வரம்புக் கோடாக நின்ற அந்தக் கொள்ளே காலத்தை மறந்து, தன்னைத் தானே சுற்றிக் கொள் வதாகச் சொல்லும் உலகத்தை மறந்து, அலகிலா விளையாட்டுடைய அந்தப் பாழாய்ப்போன அம்மை யப்பனைக்கூட மறந்து அவன் சிரித்துக் கொண்டிருந் தான். அவன் சிரிப்பிலே கண்ணிர், பெருமூச்சு, துயரச் சுமை எல்லாம் கும்மி கொட்டின.

வேடிக்கை மனிதன்!

இல்லையென்றால் அவன் மறுபடியும் மறுபடியும் இப்படிச் சத்தம் போடுவானா?

“ஐயா, இந்த நாலு முழ வேஷ்டி ஒண்ணு. ஒண்ணே கால் ருவா ஸார். இந்த நாலு முழ வேஷ்டி ஒண்ணே கால் ரூவா தான், ஸார்...!”

வியாபாரத்திற்கு இவன் தேர்ந்தெடுத் திருக்கும் இடத்தைப் பார்த் தீர்களா? கொள்ளே காலம் என்றால் பட்டணத்திலே குபேர பட்டணம் என்று அர்த்தம்; இங்கு தான் நாகரிகம் உடை உருவிலே

நி-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/123&oldid=680919" இலிருந்து மீள்விக்கப்பட்டது