பக்கம்:நிதர்சனங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 s 6 தீபாவளிக் கடவுள்

ஒன்றுக்கு ஒன்பதாக அனுபல்லவி, சரணம் பாட அவனுக்குத் தெம்பு இல்லை; அதற்குக் கூலியும் வராது. உழைத்த தற்கே துட்டு வருவதற்குத் தான் நாள் நட்சத்திரம் பார்க்கிறதே!

சந்து முனையில் திரும்பிய வாக்ஸால் வேலை யன்ை முழங்கை யைப் பதம் பார்த்து விட்டு, ஒடியே ஓடி விட்டது. முன் ஆசனத்தில் புன் ன கை கோ லமிட, பஞ்சுப் பொம் மையும் கையுமாகக் காணப்பட்ட அந்த இளவர'சை எண்ணினான்; நூலிழை இடம் காற்றுப் போகக் கூட விடாதவாறு பின்னால் அரியா சனம் வீற்றிருந்த “ல காரம்’ தம்பதிகளையும் எண்ணி னான்.

மனக் கண்ணிலே அவனுடைய சின்னஞ்சிறு குஞ்சு களும், அவனுக்கெனத் தன்னை அர்ப்பணம் செய்த ‘இனிய பாதி"யான வேலாயியும் தோன்றினார்கள் !

வேலையன் இப்போதும் சிரிப்பதற்கு மறக்க வில்லை: பைத்தியக்காரன். இவன் ஏன் சிரிக்க வேண்டும்? இவர்கள் அறுவரையும் படைத்து ஆண்டி வாக்கி நடுத்தெருவில் சந்தி சிரிக்க விட்டு, ஹாயாக உமையுடன் டான்ஸ் ஆடும் அந்தப் பித்துக்குள்ளி ஆண்டி அல்லவா வேதனை ச் சிரிப்புச் சிரிக்க வேண்டும், உலகிலே தான் காட்டும் பாரபட்சத்தை நினைந்து?

மணிக் கூண்டுக் கடிகாரம் பத்து முறை டாண் டாண்’ என்று ஒலித்தது. ஊரடங்கி வந்தது.

கொள்ளே காலம் ஓய்வு பெற்றது. பணக்கார இடம், பாருங்கள்!

வேலையனுக்கு நெஞ்சில் பயம் கவ்விக்கொண் டது. விடிந்தால் தீபாவளி, வாழ்க்கையில் வருடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/126&oldid=680922" இலிருந்து மீள்விக்கப்பட்டது