பக்கம்:நிதர்சனங்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவணத் தாங்கோட்டைச் சாலைக்கு நேர் கிழக்கே, பூவத்தக் குடித்தேவர் குடியிருப்புக்கு மேல் ஆத்தில் டெங்கும் ஒற்றையடித் தடத்தை அண்க அனைத்திருந்த கங் காணிச் சவுக்கைத் தோப்பு வந்தது. வேர்க்க விறுவிறுக்க ஒர் அரைக் கணம் நிற்கிறாள் அன்னக்கிளி.

கஞ்சிப்பொழுது வறுத்துக் கொட்டாமல் இருக் குமா? இருக்கலாமா? திடீரென்று என்ன வோ சத்தம் ஒலித்தது. எதிரொலித்தது அ ன் ன ம் பதறினாள்,

எதிர்த் து ஒடோடி வந்தாள் செண்பகம். அன்னம் வேகமாக, ஒடியா. எம்மச்சானுக்கும் உம் மச்சானுக்கும் மறுபடி கட்சி-ஊழல் விவகாரம் பத்தின வாதப்பிரதிவாதம் தடிச்சு, வாய்ப்பேச்சு மூத்திக் கடைசீலே கைகலப்பு மூண்டு போச்சு ... ஒடியா, அன்னம்!” பதறித் தவித்த வளாக விவரம் சொல்லிவிட்டு விரைந்தாள். ஒட்டமும் நடையுமாகப் பாய்ந்தாள் அன்னக்கிளி .

அங்கே-தோப்பின் வெட்டவெளி வெளிச்சத்தில் இருட்டிலே போராடுபவர்கள் மாதிரி கந்தசாமியும், வீரமணியும் மல்லுக்கட்டிப் போராடி தலைமுடி களைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள்.

மறு இமைப்பில் வீரமணி திமிறி விலகி, எட்டத் தில கிடந்த கழியை எட்டி எடுத்துக் கந்தசாமியின் மண்டையிலே ஓங்கி அடித்துவிட்டான். கந்தசாமி சுடுமணலிலே சுருண்டு வீழ்ந்தான். ரத்தத்துளிகள் சிதறின.

“ஐயையோ, அண்ணாச்சியோ!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/168&oldid=680968" இலிருந்து மீள்விக்கப்பட்டது