பக்கம்:நிதர்சனங்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. காவல்

கெட்ட சொப்பனம் கண்டவள் போல், வாசி ச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள் கண்ணாத் தா. கண் களைக் கசக்கி விட்டுக் கொண்டாள். செண் பகத்தைக் காணவில்லை. நில ந் தெளிஞ்சதும் மாந் தோப்பி விருந்து வீட்டுக்கு வந் தி டச் சொல்லியும்: இன்னமும் வரக் காணல் லியே செம்பகத்தை?பெற்ற மனம் இல்லாததையும் பொல்லாததையும் எண்ணித் தவித்தது

கண்ணாத்தாளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ராத் திரி முழுவதும் அடித்த காய்ச்சலின் நிலவரத்தை ஊகித் துக் கணிக்கக் கூடிய நேரம் இதுவல்ல தான் . மேலுக்கு முடியா மல் மேனி குலுங்கிக் கிட்டு இருந் த தை யொட்டி, நானே ராத் திரி தோப்புக் காவ லுக்குப் போகாமல், கன்னி கழியாப் பொண்ணை த் தோப்புக் காவ லுக்கு அனுப்பிச்சி வச்சது புத் தி கெட்ட காரியமாகிப் போயிடுமோ?--பதறி ஓடி னாள் கண் ண | த் தா.

மாந்தோப்பின் திறந்திருந்த முள் பத்தைக் கதவு ப் படலைத் தாண்டி நிழலை மிதித்த கண்ணாத்தா, தீயை மிதித் தி பாவனையில் பதை பதைத் தாள்: அடியே செம்ப கம்!” என்று அடி வயிற்றினின்றும் அலட்டிக் கொண்டே செண்பகத் தின் சிவந்த பாதங்களில் ஒரு தட்டுத் தட்டி விட் டாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/175&oldid=680976" இலிருந்து மீள்விக்கப்பட்டது