பக்கம்:நிதர்சனங்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} - ஆணை பிறந்தது.

கொடுத்து, அவனை மெதுவாக வழியனுப்பி வைத் தாள் மீனா. பெருமூச்சு எரிதழலாக த கித்தது.

மரகதத்துக்கு நாக்கில் நரம்பு இருப்பதில்லை. அவள் மீனாவின் கொழுந் தன் பெண் டாட்டி’! - அதாவது, மீனாவைக் கொண்டவனுடைய தம்பியின் மனைவி.அண்ணன் குடும்பமும் தம்பி குடும்பமும் அக்குவேறு ஆணி வேறாகப் பிரிந்துவிட்டன. பாச மும் உறவும்கூட அப்பா ல் பிரிய வேண்டியது தானோ?

பானுக்குட்டிக்கு நல்ல துாக்கம்.

மகளுக்குப் பக்கத்தில் மீனா பாயில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தாள். உறக்கம் பிடிக்கவில்லை அவளுக்கு. பசியின் கிறக்கமும் பாசத் தின் சுமையும் இதயத்தை வேலி கட்டி அடைத்துக் கொண்டிருந் தன. தவம் இருந்து, நான் கடந்து பெற்ற பிள்ளை ராஜா வுக்கு இந்த எட்டடிக் குச்சு கசந்து விட்டதோ? உண்மை தான்; அரண்மனையில் அவதரித் திருக்க வேண்டிய தங்க ராஜா அல்ல வா அவன் ! -

வேப்ப மரக் காற்று உனக்கை கூட்டி வீசத் தொடங்கியது.

உலை வைக்க வேண் டும்.

வேலை முடித்து மூன்று கல் கடந்து திரும்பும் மச்சானுக்கு வெந்நீர் வைக்க வேண்டும். பொழுது பட்டதும் வந்து குதித்து விடுவான் தங்கவேலு:

மீனா மெல்ல எழுந்தாள். நெஞ்சின் பளு. மண்டைக்கு ஏறிக்கிடக்கிறது. தலை மாட்டில் கிடந்த அந்த சட்டையை அப்படியே போட்டு விட்டு நகர்ந்தாள். ராஜா வும் அந்தச் சட்டையை அப் படியே போட்டுவிட்டுத் தானே போய்விட்டான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/210&oldid=681027" இலிருந்து மீள்விக்கப்பட்டது