பக்கம்:நிதர்சனங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

குளிக்கலாமா? ஊகூம், ஏலாது; கூடாது; மல்லுக் கட்டி எப்படியா ச்சும் ச வுக்கைக் கட்டைத் தூக்கித் தலை மேலே வச்சுக் கிட்டு நடந்து போப், பத்ர காளிக்கு ஒரு கும் பிடு போட்டுப் புட்டு, மேற்காலே மறுகி நடந்து, ஆவணத் தாங் கோட்டைச் சாலை எல்லையை மிதிச் சுட்டா. அப்பாலே, இருட்டும் ஒண் ணும் செஞ்சிடாது; பின்னே, எதுவும் எதையும் செய்ய வாய்க் காது'! மண்ணின் ஈரம் கண்களில் கசி கிறது.

வேடிக்கை தான்! மப்புக் கலையத் தொடங்குகிறது; மஞ்சள் கதிர் கள் பொன் முலாம் பூண்டு, பொன் மூலம் கொண்டு சுவடு காட்டிக் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக் கின்றன போலும்!

‘பத்தை ச் செடிப் பக்கம் அரவம் கேட்டது, யாரை யுமே காண வில்லையே!...

இப்போது பவளத்திற்கு ஒரு புதுத் தெம்பு, பழைய நெஞ்சுரத்திற்குப் புதிய பலம் கூடியது: கைக் கூடியது. ஆத்தாடியோ மூச்சைப் பிடித்துக் கொண்டே, சவுக்குக் கட்டை லசந்தித் தூக்கி தலை சும் மாட்டில் பொருத்தி வைத்துக் கொண்டே, இடது கால் பெருவிரலால் வாங்கரிவாள் கம்பை வாகு கணித்து எடுத்து வலது கைப் பிடுப்பில் ஏந்தியவாறு நடக்கத் தொடங்கினாள் பவளக் காடி- அழகு : சிலை யாக மோஹினிச் சிலையாக!...உள் பாவாடை இப்போது கால்களில் பின்ன வில்லை!

தொடரும் விதி, விதிக்கு மட்டும் தான் என் நில்லை; நிழலுக்கும் அவ்விதி உண்டோ?

அந்திக் கன்னியின் கண் பொத்தி ஆட்டம் தொடர்கிறது; தொடர்ந்து கொண்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/71&oldid=681087" இலிருந்து மீள்விக்கப்பட்டது