பக்கம்:நிதர்சனங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பத்ரகாளியின் கற்பு

என்ன அரவம் அது? கால்களின் சதங்கை ஒலியா?

ஏலே, பொண்டுகளா? ஒ, செவ்வந்திக் குட் டி ஏட்டி, பூரணியோ! அடியே, கருப்பாயி!

கூட்டுக்காரி ஒருத்தியையுமே காணோமே? கண் கட்டு மாயமாய் அந்திக் கட்டிலே எங்கே தொலை ந் தார்களாம்?. ஒரு வேளை, ‘ஈசான் ய முடுக்கில் இருந்த பத்ரகாளிகோயில் கம்மாயில் விழுந்து புரண்டு கொண்டிருப்பார்களோ? விடிசா மத்திலே அபூர்வமான அதிசயமாக வானம் கண் திறந்த தன் விளைவாக, வயல் வரப்புகளைச் செய் நேர்த்தி பண்ணி நிலக் கடலை விதைக்க பூர் வாங்க ஏற்பாடு கள் செய்வதில் முனைந்திருந்த அந்தப் பெண்களுக்கு சரம் தேவைப்பட்டாலும் தேவைப்பட்டிருக்கலாம்!

இனியும் இந்தப் பொட்டல் காட்டிலே தனியே திற்கக் கூடாது?

சவுக்குத் தோப்பிலிருந்து கொய்-கொய்’ என்ற அரவம், அரவம் சீறுவது மாதிரி கேட்டது.

அந்த இடுக்கில் பத்ரகாளி கோயிலின் கோபுரக் கலசம் துலாம்பரமாகவே தெரிந்தது.

பவளத்துக்கும் உடம்பு அரித்துப் பிடுங்கிறது. முதுகுப்புறத்து ரவிக்கையை நீம்பிவிட்டவளாகச் சொரிந்து கொள்ள லா னாள். மாங்குடிச்சேரி எல்லையில் இருந்த சாம்பான் தாக்குப் புஞ்சைக் காட்டில் ஆயி சகிதம் இவளும் மண்ணே கதி என்றி ருந்தவள் தான்! இனிமேல் பயம் இல்லை. பஞ்சம் பஞ்சாய்ப் பறந்து விடும் ஆடிப்பட்டம் பலன் காட்டி விடும்!... ஆமாம்; வானம், ஒரு முறை கண் திறந்து விட்டால், அப்புறம் கொட்டாமல் நிற்கா தாம்!- சீதைப் பாட்டி சொல்ல மாட்டாளா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/70&oldid=681086" இலிருந்து மீள்விக்கப்பட்டது