பக்கம்:நிதர்சனங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மகமாயி பேசினாள்

முத்தாயின் அழகான முத்துப் பற்களைத் திறந்தால், முத்துச் சிதறுமோ சிதறாதோ, கட்டாயம் அழகான, கவர்ச்சி மிகுந்த புன்னகை சிதறி விளையாடும். அப்படிப்பட்டவள், அப்பொழுது எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க, கவ்வல் கழி புடன் தன் குடிசையின் முன்னே வந்து நின்றாள். அவளைப் பெற்ற கருப்பாயிக்குக் கதிக் கலக்கம் உண்டாகக் கேட்கவா வேண்டும்? பாவம், பதறிப் போய்விட்டாள். பெற்ற மனம் பித்து ஆனது.

“என்ன, என்ன சங்கதி?’ என்று தாய் பதற்றம் மூளக்கேட்டாள். அவளது த ள ர் ந் த மேனி அல்லா டி யது.

அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் வாசலுக்கு விரைந்தாள் முத்தாயி. சமைந்த பெண்ணின் பருவச் செழிப்பும் உருவக் கவர்ச்சியும் அவளுடன் குலுங்கக் குலுங்க ஓடின. ட்ரியோ! ஏலே. ட்ரியோ!’ என்று சொல்லி அதட்டிய வளாக, உசிலை மரத்து ஒண் டலை அடைந்த ஆட்டுக் குட்டியைக் கழி கொண்டு மடக் கித் திருப்பி, மற்றக் குட்டிகளோடு வசப்படுத் தி னாள்.

தழை களைத் தின்று கொண்டிருந்த அ ந் த ஆட் டின் பால் மடியைச் சுவைக்கத் தொடங்கி விட்டன. அந்த இரண்டு குட்டிகளும்! தாய் ஆடு தன் குட்டிகளை மாறி மாறி, மாற்றி மாற்றிப் பார்த்தது; மறு கணம், பாசத்தை வெளிப்படுத்தத் தீனமாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/96&oldid=681114" இலிருந்து மீள்விக்கப்பட்டது