உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

105

கலைஞர் மு. கருணாநிதி : அதுமட்டுமல்ல, ஈழத் தமிழகம் அமைய வேண்டும் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அமைச்சராக இருக்கிற மாண்புமிகு டாக்டர் காளிமுத்து அவர்களின் கருத்துக்கும், மேலவை உறுப்பினராக இருக்கிற டாக்டர் சனார்த்தனம் கருத்துக்கும் வேறு சில அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுடைய கருத்துக்கும் ஒற்றுமை இருக்கிறது. அமைச்சரவையில் இருக்கிற மற்றவர்கள் எப்படிக் கருதுகிறார்களோ அல்லது முதலமைச்சர் அவர்கள் எப்படிக் கருதுகிறாரோ எனக்குத் தெரியாது

னி

மாண்புமிகு அமைச்சர் டாக்டர் காளிமுத்து அவர்களே சொல்லியிருக்கிறார். "சிங்களவர்களோடு தமிழர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று யார் சொன்னாலும், அவர்கள் ஜெயவர்த்தனேவின் கைக்கூலிகள், ஜெயவர்த்தனேவின் கங்காணிகள். மானமுள்ள தமிழர்களாக, மனிதாபிமானமுள்ள தமிழர்களாக அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக அவர்கள் இல்லை, திராவிட இயக்கத்தைச் சார்ந்த எவனும், தமிழனுக்குப் பிறந்த எவனும் ஸ்ரீலங்காவிலே தமிழனுக்குத் தனி நாடு கூடாது என்று சொல்லமாட்டான்”. தம்பியே இப்படி அறைகூவல் விடும்போது அண்ணன் தனி நாடு கூடாது என்றா சொல்வான். எனவேதான் தம்பியே இந்த அளவுக்கு அறைகூவல் விட்டபிறகு அங்கே தனி நாடு தேவையில்லை என்று கூற முடியுமா? ஆனால் அமைச்சர் டாக்டர் காளிமுத்து அவர்களின் கருத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்று பார்த்தால், 28.10.1983 அன்று சட்டசபையில் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் பேசியதாக பத்திரிகையில் வந்திருக்கிறது. அவர் சொல்லியிருக்கிறார், "சோமசுந்தரமோ காளிமுத்துவோ என்னை மீறிப் பேசமாட்டார்கள். எந்தக் கருத்தைச் சொல்வதானாலும் அவர்கள் பேசுவதற்கு முன்னால் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் பேசுவார்கள். எங்களுக்குள் கருத்து ஒற்றுமை இல்லை என்றால், அமைச்சரவையைக் கலைத்துவிட்டு வெளியேறுவோம்" என்று பேசியிருப்பது அமைச்சர் டாக்டர் காளிமுத்து அவர்களின் வாசகங்களுக்கு தந்திருக்கின்ற ஒப்பந்த முத்திரையாக அல்லது அனுமதி