உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

நிதிநிலை அறிக்கை மீது

முத்திரையாக நான் அறிந்து கொண்டிருக்கிறேன். எனவே ஈழத் தமிழகம் அமைய வேண்டும் என்ற ஒருமித்தக் கருத்துக்களை பிரதமரிடம் எடுத்துச் சொல்லப்படும் அளவுக்கு ஒரு கையெழுத்து இயக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து, இரண்டொரு பிரச்சினைகளைப் பற்றி மட்டும் சொல்லிமுடித்துவிட விரும்புகிறேன்.

இது நாவலர் அவர்களுக்கு நன்கு தெரியும் இரண்டாண்டுகளுக்கு முன்பே எடுத்துச் சொல்லப்பட்டது இது இந்திய வரலாறு. தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்திய வரலாறு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சட்டமன்றப் பேரவையில் காட்டினேன். முதலமைச்சர் கூட கல்வியமைச்சர் அவர்களைக் கூப்பிட்டு கூப்பிட்டு இதுபற்றி விசாரிக்கச் சொல்லியும், பிறகு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. நாம் சொல்கிறோம் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று. ஆனால் இங்கே நாமே மாநிலத்தைப் புறக்கணிக்கிறோம். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆறாவது வகுப்புக்கான வரலாறு. இதில் எதோடு வரலாறு நின்றுவிடுகிறது என்றால் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமர் ஆகிறார். இராஜாஜி கவர்னர்-ஜெனரலாகிறார். பிறகு திரு. சஞ்சீவ ரெட்டி குடியரசுத் தலைவராகிறார். அதற்குப் பிறகு திரு. லால் பகதூர் சாஸ்திரி, திருமதி இந்திராகாந்தி, திரு. மொரார்ஜி தேசாய், திரு. சரண்சிங் ஆகியவர்கள் பிரதமர்களாகப் பணியாற்றி னார்கள் என்று முடிகிறது.

ஒரு காலகட்டத்தில், அதாவது 1977ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவைத் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி பொதுத்தேர்தலில் தோற்கடிக்கப் பட்டு புதிய கட்சியான ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது என்ற குறிப்பை இந்த வரலாற்றில் மறைப்பதற்கு என்ன காரணம்.

அதுமறைக்கப்பட்டிருக்கிறது. அது மாத்திரமல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இருபதாண்டுக் காலம்