கலைஞரின் சட்டமன்ற உரைகள்
161
கொண்டு வருவதோடு தொழில் முயற்சிகள் பற்றித் தொழிற் துறை மானியத்தில் விரிவாக விவாதிக்கலாம் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது, அவைகள் எல்லாம் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்று திரு. பூவராகன் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள். அதை நான் நிதிநிலை அறிக்கையிலேயே 85வது பாராவிலேயே எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இவைகள், மக்களிடத்திலே போய்ச் சேருவதற்கு வழி என்ன என்று சொல்லியிருக்கிறேன்.
வை சரியாகப் போய்ச் சேர்வதில்லை என்பதற்கு உதாரணம் சொல்லவேண்டுமேயானால், இப்போது புதிதாக ஒரு பட்டியலைச் சேர்த்திருக்கிறோம். ஏற்கெனவே அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆட்சிக் காலத்திலேகூட, விபத்திலே இறந்துவிடும் சில பேருக்கு நிதியுதவி செய்வதாக அறிவிக்கப்பட்டது. மரம் ஏறும் தொழிலாளி, பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளி, கிணறு வெட்டும் தொழிலாளி, பனை மரம் ஏறி பதநீர் இறக்குவோர் என்று இப்படி. அதோடு சேர்த்து, இப்போது விவசாயத் தொழிலாளி, சிறு விவசாயி, சலவைத் தொழிலாளர்கள், செருப்புத் தைப்போர், தீப்பெட்டித் தொழிலாளிகள், மர வேலைப் பணியிலே ஈடுபடுவோர், கூடை முடைவோர், கல் உடைப்போர், கட்டிடத் தொழிலாளர்கள் ஆகியவர்களோடு, லாரி, ஆட்டோ ரிக்ஷா, தனியார் கார், டாக்சி, பேருந்து ஓட்டுநர், எல்லாக் கட்டிடக் கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்திலே சிக்கி இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 10,000 ரூபாய் தரப்படும் என்று நான் இங்கே அறிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் கடந்த காலத்திலே இதிலே எல்லாருக்கும் இல்லாவிட்டாலும், சில பகுதியினருக்கு இது போன்ற விபத்து உதவி தரப்பட்டதாகச் சொல்லப்பட்டது. தரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நான் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நான்
பார்த்த சில செய்திகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.