உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

நிதிநிலை அறிக்கை மீது

பெரியண்ண நாடார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், விபத்திலே இறந்த தேதி 5.8.1986. 1986ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 5ஆம் தேதி இறந்துவிடுகிறார். அவருக்கு உதவிக்கு ஆணை பிறப்பித்த தேதி 31.3.1989. இறந்தது 1986இல் குடும்பத்திற்கு உதவிக்காக நான் வந்து ஆணை பிறப்பிக்கிறேன். வி. செல்லையா, குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் விபத்திலே இறந்தது 27.3.1979. இப்போது நான் ஆணை பிறப்பிக்கிறேன், 31.3.1989இல், 10 ஆண்டு களுக்குப் பிறகு அந்தப் பணத்தை வாங்க யார் இருக்கிறார் களோ எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்ட அளவிற்குத் தான் பூவராகன் சொன்னதைப்போல, உரிய அளவில் போய்ச் சேரவில்லை.

அது மாத்திரமல்ல, பெரியார் மாவட்டத்தில் ராமசாமி நாடார், அவர் விபத்திலே இறந்தது 4.6.1984இல். அவருக்கு உதவி அளிக்கப்பட்டது இப்போது 29.3.1989இல்தான். நான் கையெழுத்திட்டு உதவிப் பணத்தை அனுப்பியிருக்கிறேன் அதைப் போல், ஏ. சுடலைமணி நாடார், அவர் விபத்திலே இறந்தது 8.5.1985இல்; அவருக்கு 16.2.1989லேதான் நாம் உதவி அளித்திருக்கிறோம். கே. அப்புக்குட்டி 21-2-1987இல் விபத்தில் இறந்தார், அவருக்கு 16.2.1989இல்தான் உதவி அளிக்கப்பட்டிருக்கிறது. பேச்சிமுத்து 2-6-1987இல் விபத்தில் இறந்தார். இப்போது 16.2.1989லேதான் உதவி அளிக்கப் பட்டிருக்கிறது. சென்னியப்பன் 16.4.1987இல் விபத்தில் இறந்தார். அவருக்கு 16.2.1989இல்தான் உதவி அளிக்கப் பட்டிருக்கிறது. ஒரு கோப்பில் நான் இதையே எழுதினேன். நாராயணசாமி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் விபத்திலே இறந்தது 6-12-1981இல். அவருக்கு ஆணை பிறப்பித்து மீண்டும் பணம் அனுப்பியது 3-3-1989இல் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, அந்தக் கோப்பில் இதையே எழுதினேன். நான் அந்தக் கோப்பில் எழுதும்போது '1981இல் விபத்தில் மாண்டவர் குடும்பத்திற்கு 1989இல் உதவி அளிப்பது வேதனையான விசித்திரம் விசித்திரம். இது போன்றவற்றில் விரைவான நடவடிக்கைக்கு வழி வகுத்திட வேண்டும்' என்று எழுதினேன். எனவேதான் இது போன்ற நிலைமை இனிமேல் வராமல் நிச்சயமாக இந்த அரசு