உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

163

பணியாற்றும். 'சொன்னதைச் செய்வோம் (மேசையைத் தட்டும் ஒலி) செய்வதையும் செவ்வனே செய்வோம்' என்று திரு ரு. பூவராகன் போன்றவர்களுக்கும், மற்றுமுள்ள எதிர்க்கட்சி, தோழமைக்கட்சி நண்பர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கிராமப்புறங்களில் பணிகள் சீராக நடைபெற வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் பல கட்சித் தோழர்களும் அதிலே உள்ள குறைபாடுகள், முறைகேடுகள் இவைகளை யெல்லாம் அறிவித்த காரணத்தால் திடீர் என்று ஒரு மாற்றம், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த மாற்றம் நல்ல மாற்றமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்ததிலே தவறு இல்லை. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் அந்த கிராம அதிகாரிகள், மாற்றப்பட்டுப் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட காரணத்தினாலே பல சிக்கல்கள் எழுந்து இருப்பதை இன்றைக்கு எங்களால் உணர முடிகிறது. அந்த அதிகாரிகள் அந்தக் கிராமத்தில் இருப்பது இல்லை. அடங்கல் போன்றவை, மற்ற கணக்கு வழக்குகள் இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ள அந்த கிராமத்திலுள்ள அனுபவசாலிகள் இருந்திட வேண்டும். அவர்கள் மீது குறைகள், சிறுசிறு குறைபாடுகள் அவர்கள் பணம் கேட்கிறார்கள், லஞ்சம் வாங்குகிறார்கள், ஊழல் நடக்கிறது என்கின்ற அந்தக் குறைபாடுகளில் எல்லாம் சில பலவற்றில் உண்மை என்றாலும்கூட அது அறவே நீக்கப்பட்டுவிட்டக் காரணத்தால் கிராமப்புறத்தில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். கிராமக் கணக்குகூட சரியாக எழுதுவதற்கு கிராமங்களில் ஆள் இல்லை, ஆள் இல்லை, இன்னும் சொல்லப்போனால் ஜனன, மரண கணக்குகூட கணக்குகூட சரியாக எழுதப்படாத ஒரு சூழ்நிலை கிராமங்களிலே இருக்கிறது. இதையெல்லாம் மாற்றி அமைத்து, அதே நேரத்தில் புதிதாக இந்தப் பணியில் சேர்க்கப்பட்ட அலுவலர்களுக்கு எந்தவித மான பாதகமும் வராமல் எப்படி இதைமாற்றி அமைக்கலாம் என்பதை அறிவதற்காக முன்னாள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி அவர்களைத் தலைவராகக் கொண்டு, வருவாய்த் துறைச் செயலாளர், வருவாய்