170
நிதிநிலை அறிக்கை மீது
தேசிய மயமாக்கப்பட்டக் கொள்கை திருத்த மசோதா இல்லாமலே சாகாமல் செத்துவிட்டது. இருந்தாலும் திருத்த மசோதாவை, அழுத்தந்திருத்தமாக நிறைவேற்றினார்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வேண்டும். ராஷ்டிரபதியினுடைய ஒப்புதல் அதற்குத் தேவை. அந்த ஒப்புதல் இதுவரை வராமலே இருந்தது.
பஸ்
அந்த ஒப்புதல் சில நாட்களுக்கு முன்பு வந்துவிட்டது அந்த ஒப்புதலை இப்போது வெளியிட்டால் என்ன ஆகும்? நேஷனலைசேஷன் என்ற கொள்கை அறவே கொல்லப்பட்டு விடும். அதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து கையெழுத்து இட்டுவிட்டார். அந்த ஒப்புதல் சமீபத்தில் இந்த அரசுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த ஒப்புதலோடு வந்த மசோதாவைச் சட்டமாக நாங்கள் வெளியிட்டுவிட்டால் தேசியமயக் கொள்கை அறவே ஒழிந்துவிடும் என்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தை உடனே நாங்கள் கூட்டி அதில் என்ன முடிவு எடுத்திருக்கிறோம் என்றால், இந்த மசோதாவை, சட்டமாக வெளியிட வந்துள்ள ஒப்புதலை வெளியிடுவதில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
எப்படியோ நிலையை கெடுக்கப்பட்டுவிட்டது; தேசியமயக் கொள்கையின் நிலைமை கெடுக்கப்பட்டுவிட்டது; இதை வெளியிடாததன் மூலம் இப்போது இந்த வழித்தடங்கள் பற்றிய உரிமை தருவதும் தராததும் நம்முடைய கையிலேயே இருக்கிறது. இதனால் நமக்கு வசதிப்படும் போதெல்லாம் - இன்றைக்கு நான்காயிரம் பேர் தனியாக பஸ்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நமக்குப் பணவசதி ஏற்பட்டு இன்னின்ன வழித் தடங்களிலே பஸ்களை விடலாம் என்று எண்ணுகின்ற நேரத்தில் எல்லாம் அதை எடுத்துக் கொள்கிற அந்த வழித்தடங்களில் பஸ்களை விடுகின்ற உரிமை இதை வெளியிடாததன் மூலம் இந்த அரசு அந்த உரிமையைப் பெறுகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).