உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

ல்

171

மற்றும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து இதுவரை வந்துள்ள விவரங்களின் மீது 23 கோடி ரூபாய் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக இந்த அரசு ஆணையிட்டு இருக்கிறது. உடனடியாக 25 கோடி ரூபாய் வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டிருக்கிறோம். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஏன் இதுவரையில் கூட்டவில்லை என்று எல்லாம் கேட்டார்கள். நாங்கள் வந்து 60 நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள்ளே 15, 16 தேதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம். முதலிலேயே கூட்ட இருந்தோம். அப்போது பட்ஜெட் தயாரிக்கிற பணி மும்முரமாக இருந்த காரணத்தாலும், பல இலாக்கா அமைச்சர்களோடு கலந்து பேசி வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பதற்கான விவரங்களைச் சேகரிக்க வேண்டியிருந்த காரணத்தாலும், அந்த நேரத்தில் அந்த நேரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்து பேச இயலாது என்பதாலும், சட்ட சபை நடைபெற்று பட்ஜெட் விவாதத்தில் இங்கிருப்பவர்கள் சொல்கிற குறைபாடுகளை எல்லாம் தொகுத்துக் குறித்து வைத்துக் கொண்டு அதன்பின் கலெக்டர்களிடத்திலே இது பற்றி எல்லாம் விவாதித்து நல்ல முடிவு எடுக்கலாம் என்பதாலும்தான் வருகிற 15, 16 தேதிகளில் மாவட்டக் கலெக்டர்களுடைய கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம். அதிலே வறட்சி நிவாரணப் பணிகளுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதைத் தெரிந்து மத்திய அரசுக்கு நம்முடைய தேவையைத் தெரிவிப்போம். வறட்சி நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடைபெறும் என்பதை உறுதியாக உங்களுக்கு இங்கே தெரிவித்துக்கொள்ள நான் கடமைப்பட்டிருக்கின்றேன். (மேசையை தட்டும் ஒலி).

வேறு சில அறிவிப்புகளையும், வரிச் சலுகைகளையும் அறிவிப்பதற்கு முன் மகிழ்ச்சியோடு நான் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன் நம்முடைய திரு. பொன் விஜயராகவன் அவர்கள் ஒரு கிளப் பற்றிய செய்தியை இங்கே கேட்டார்கள். நம்முடைய திரு வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் வேட்டி கட்டிக் கொண்டு போனதைப் பற்றிச் சொன்னார்கள். நான் இந்த அவையிலேயே பதில் சொன்னேன். எனக்கு இன்று 'மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்லே' யிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது.