கலைஞரின் சட்டமன்ற உரைகள்
189
தயாராகிக் கொண்டிருக்கிறது. அது தயாராகி வருமேயானால் இந்த நிதி நிலை அறிக்கை இப்பொழுது நாம் விவாதித்து அவர் நமக்குப் பதில் கொடுத்திருக்கும்படியான இந்த அறிக்கை விவாதத்திற்கு வரக்கூடிய இந்தக் கூட்டத்தில் அந்தச் சட்டம் வருமேயானால் அந்த ஓட்டர் பட்டியல் தயாராகி முடிக்கப்படுகிற ஒரு சூழ்நிலை ஏற்படுமேயானால் ஒரு சட்டத் திருத்தத்தையாவது கொண்டு வந்து 18 வயது அடிப்படை யிலேயே தேர்தல் நடத்தலாம் என்று கூறப்பட்டது. இப்போது முஸ்லீம்கள் மத்தியில் அவர்களுடைய நோன்பு காலம் எல்லாம் இருப்பதையொட்டி இதை ஒத்தி
வைக்க
வேண்டுமென்ற கோரிக்கை இருக்கிறது. ஆகவே மறுபடியும் இந்தத் தேர்தலை ஜூன் மாதத்தில் நடத்துகிற அளவிற்கு ஒத்திவைத்து - அதற்குள்ளாக நிச்சயமாக ஓட்டர் பட்டியல் முடிந்து விடுமென்று எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் அந்த வேலை துரிதமாக கீழே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 18 வயது ஓட்டர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கு கொஞ்சம் ஜூன் மாதம் வரையில் ஒத்திவைத்து நடத்த அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.
திரு. எம். அப்துல் லத்தீப்: தலைவர் அவர்களே, மாண்புமிகு ரமணி அவர்கள் எழுப்பிய இந்தப் பிரச்சினையை நானும் எழுப்பி அவர்களுக்கு ஆதரவாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்கனவே கேட்டுக்கொண்டதைப்போல, இப்போது அரசின் நிலையென்ன என்று அறிவிப்பதுதான் முறையாக இருக்கும். ஏனென்றால் தேர்தலை குறித்து ஆயத்தங்களைச் செய்யக் கூடியவர்கள் செய்யமுடியும். எனவே
அதனை
அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அரசு
இன்னும் ஒரு வேண்டுகோள். தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி போன்ற நாட்களில் வழங்கப்படுகிற சலுகைகளை ரம்ஜானிற்கும் வழங்க வேண்டும் என்று எங்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது. எனவே, தீபாவளிக்கும், தமிழ்ப் புத்தாண்டிற்கும் வழங்கப்படுகிற சலுகைகள் ரம்ஜானிற்கும், கிறிஸ்துமஸ்ஸிற்கும் சேர்த்து வழங்கினால் அது முறையாக இருக்கும்.