கலைஞரின் சட்டமன்ற உரைகள்
195
இருக்கிறீர்கள். முடித்தால் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
திரு. எஸ். ஆர். இராதா: தலைவர் அவர்களே, உங்களுக்கு நான் உதவியாக இருக்கிறேன். வழக்கில் சம்பந்தப் பட்டார் என்று மட்டும் சொல்கிறேன். குற்றச்சாட்டு பின்னால் நிரூபிக்கப்பட்டால் பேசிக்கொள்ளலாம்.
இங்கே மாண்புமிகு திரு. சீனிவாசன் ஒன்றைச் சொன்னார். இங்கே பலபேர் கட்சித் தலைவர்கள் இன்று வழக்கு மன்றத்திலேபோய் வழக்கு போடுகிறார்கள் என்று. என்னிடத்திலே நான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் வேடிக்கையான ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கு என்ன வென்றால், சென்னையிலே சன்னையிலே கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சங்கம் என்று ஒரு சங்கம் இருக்கிறது. அந்தச் சங்கத்திலே ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளும் சேர்ந்து உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால் அந்தச் சங்கத்திலேயிருந்து முதலமைச்சரைப் பார்க்கமுடியவில்லை என்று நீதிமன்றத்திலே ஒரு வழக்கு போட்டார்கள்.
பலமுறை முதலமைச்சருக்கு மனு கொடுத்தார்கள். செயலாளருக்குக் கொடுத்தார்கள். உதவியாளருக்கும் கொடுத்தார்கள். யாரும் பார்க்கவில்லை. கடைசியிலே, பார்த்தார்கள் வழக்கறிஞர் ஒருவர் துணை கொண்டு நீதி மன்றத்திலே போய் ஒரு வழக்குபோட்டு, நாங்கள் முதலமைச்சரைப் பார்ப்பதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்று கேட்டார்கள். உடனே நீதிமன்றம் ஒரு டைரக்ஷன் கொடுத்து, முதலமைச்சர் இந்த கைவிடப்பட்ட பெண்களைப் பாருங்கள் என்று சொன்னார்கள். உடனே முதலமைச்சரும் அவர்களுக்கு ஒரு நாள் இன்டர்வியூ கொடுத்துப் பார்த்தார். கோரிக்கைகளை எல்லாம் சொன்னார்கள். மறுபடியும் அவர் சொன்னார், திரும்ப மறுபடியும் அடுத்துப்பார்க்கிறேன் என்றார். ஆனால் திரும்ப இப்போது பார்க்க முடியவில்லை முதலமைச்சரைப் பார்க்க முடியவில்லை, எதிர்க் கட்சித் தலைவரையாவது பார்ப்போம் என்று என்னிடத்திலே கொண்டு வந்து ஒரு வழக்கைக் கொடுத்து, நாங்கள் மீண்டும் வழக்கு மன்றம் போவதா அல்லது முதலமைச்சரைப் பார்க்க முடியுமா என்று கேட்கிறார்கள். நான் எதற்காகச் சொல்கிறேன்