196
நிதிநிலை அறிக்கை மீது
என்றால், எங்கள் தலைவரைக் கேலி செய்கிற நீங்கள், ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலைமை வருகிறது என்று சொன்னால், நீங்கள், ஒரு கட்சியை நடத்துகிற எங்களைக் கேலி செய்கிற நிலைமைக்கு வரலாமா? அவர் என்னென்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாதா? எனவே, மாண்புமிகு திரு.துரைமுருகன் அவர்கள் இங்கே பேசிய பேச்சுக்கும், மாண்புமிகு திரு. ரகுமான்கான் பேசிய பல பேச்சுக்களுக்கும், நேரத்தில், காலத்தில் நிச்சயமாக என்னுடைய பதில்களைச் சொல்கிறேன் என்று தெரிவித்து, நீங்கள் மணி அடிப்பதற்கு முன்னாலேயே முடிக்க வேண்டும் என்று என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் மற்றும் கட்சிகளின் தலைவர்கள், மாண்புமிகு உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக ஆற்றியுள்ள உரைகளுக்கும், அதிலே எடுத்துச் சொல்லப்பட்டுள்ள நல்ல கருத்துக்களுக்கும் இந்த மாமன்றத்தில் அரசின் சார்பாக என்னுடைய நன்றியினை நான் தெரிவித்துக்கொள்கிறேன். பலரும் பேசவேண்டும், பலருக்கும் பேசுகின்ற வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதற்காகப் பொதுவிவாத நாட்களை மேலும் கூட நீட்டித்துத் தந்து பலருடைய கருத்துக்களையும் இந்த மாமன்றத்திலே அறிந்துகொள்கின்ற வாய்ப்பை இந்த அவையிலே அரசு பெற்றிருக்கின்றது.
ய
இன்றைக்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர், நம்முடைய இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் சில பல தவறுகளை தனக்கே உரிய உணர்ச்சி வேகத்தோடு குறிப்பிட்டார்கள் என்றாலும்கூட, பல ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கே அவர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
பொதுவாக, இந்த மன்றத்தில் வழங்கப்பட்டுள்ள பல கருத்துக்கள் இந்த அரசு தொடர்ந்து நல்லமுறையிலே பணியாற்றுவதற்கும், மக்கள் நலத் திட்டங்களை