222
நிதிநிலை அறிக்கை மீது
நீக்கப்பட்ட தொழிலாளர்களை, கான்ட்ராக்ட் தொழிலாளர்க ளைத்தான் அதே இடத்தில் நியமிக்க வேண்டுமென்று சட்டத்தில் வழி வகுக்கவில்லை. அதைப் பிடித்துக் கொண்டு இன்றைக்கு நிர்வாகங்கள் நம்மிடத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இதற்கான சட்டமாறுதலைச் செய்ய இந்த அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்ற நல்ல செய்தியை நான் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
கைத்தறித் தொழிலாளர்களுக்கான நலச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரையில் வழக்கு நடந்து, இந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வந்துவிட்டதால், இந்தச் சட்டத்தை அமல் நடத்த எந்தவிதமான தடையும் இப்போது இல்லை. ஆனால் ஒரே ஒரு பிரச்சினை
என்னவென்றால், கைத்தறித் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்டு, ஒன்றுபடுத்தி, பணியாற்ற இன்னும் அதிகமான அதிகாரிகளும், பணியாளர் களும் அரசுக்குத் தேவைப்படுகிறார்கள். அதற்கான திட்டம் அரசாங்கத்தினுடைய பரிசீலனையில் உள்ளது, விரைவில் அது நடைமுறைப்படுத்தப்பட ஆணைகள் பிறப்பிக்கப்படும் என்றும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலாளர்களை நிரந்தரம் செய்வதிலே சட்ட அமலாக்கம் தீவிரப்படுத்தப்படும் என்று நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்தச் சட்டத்தின்படி 31.12.1989 வரையில், 6,275 தொழிற்சாலைகளில் 16,537 தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். எந்த நிர்வாகத்திலேயாவது இந்தச் சட்டம் அமலாக்கப்படுவதில் குறைகள் இருந்து, அவை குறிப்பிட்டுக் காட்டப்பட்டால் தக்க நடவடிக்கை எடுத்து, அந்தக் குறைகள் களையப்படும் என்ற உறுதியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல்
சம்பளப் பட்டுவாடாச் சட்டம் பணிக்கொடை பட்டுவாடாச் சட்டம், இ.எஸ்.ஐ. சட்டம் ஆகிய சட்டங்கள் செயல்படுவதிலும் தயக்கமோ, தாமதமோ காணப்பட்டால், அவற்றைக் களைந்து மேற்படி சட்டங்களை