260
நிதிநிலை அறிக்கை மீது
மாநிலத்தில் தேர்வு நிலை, மற்றும் சிறப்பு நிலை இருக்கிறது. கேரள மாநிலத்திலேயும் தேர்வு நிலை, ஒரு அடுக்கு அதிகம். சிறப்பு நிலை அதற்குமேல் ஒரு அடுக்கு நிலை. இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தேர்வு நிலை, பதவி உயர்வு அளவுக்கு இருக்க வேண்டுமென்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இல்லை. பதவி உயர்வு வி அளவுக்குச் செல்ல வேண்டுமென்றால் 3 அடுக்குக்கு மேல் வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனினும், முன்பு இருந்த நிலையைக் கருதி, தற்போதுள்ள புதிய சூழ்நிலையில், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைத்திட்டத்தை எவ்வாறு செயற்படுத்துவது என்று அரசு ஊழியர்களின் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பெரும்பாலான பதவிகளுக்குத் தேர்வு நிலை இரண்டு அடுக்குகளுக்குக் குறையாமலும், சிறப்பு நிலை அதை விட விட ஒரு ஒரு அடுக்கு மேல் என்ற புதிய திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கான ஆணைகள் இன்று பிறப்பிக்கப் படுமென்று தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய முறையில் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையானது தொடக்க ஊதியம் ரூபாய் 2,500ம் அதற்குக் கீழே உள்ள ஊதிய விகிதங்களில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் பொருந்தும். இதிலே குறிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், முன்பு இருந்த முறையில் சில பதவிகளுக்கு மட்டுமே சிறப்பு நிலை இருந்தது. இந்த நிலையை மாற்றி தொடக்க ஊதிய விகிதம் ரூபாய் 2,500ம், மற்றும் அதற்குக் கீழே உள்ள ஊதிய விகிதங்களைப் பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் தற்போது சிறப்பு நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையினால் ஆண்டு ஒன்றுக்கு ஏற்படும் கூடுதல் செலவு 15 கோடி ரூபாயாக இருக்குமென்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தத் தொகை நிதிநிலை அறிக்கையிலே அறிவிக்கப்பட்ட 10 கோடி ரூபாயை விட 5 கோடி அதிகமென்று தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து, ஊராட்சி மன்றங்களுக்குத் தொலைக்காட்சிப் பெட்டிகள், தமிழ்நாட்டிலே உள்ள ஊராட்சிகளுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம் நிதி நெருக்கடியால் இடையில் நிறுத்தப்பட்டது. ஊராட்சிகள் தங்கள் நிதி வசதிகளுக்குகேற்ப தொலைக்காட்சிப்